மாடி தோட்டத்தில் வெங்காயம் சாகுபடி முறை..!

0
182
மாடி தோட்டத்தில் வெங்காயம் சாகுபடி

மாடி தோட்டத்தில் வெங்காயம் சாகுபடி முறை..! Onion cultivation in tamil..!

நாம் அனைவரும் அன்றாட சமையலுக்கு பயன்படுத்தும் காய்கறிகளை நம் தோட்டத்திலேயே அல்லது மாடித்தோட்டத்திலோ பயிரிடலாம். இவ்வாறு பயிர் செய்வதினால் நம் உடல் நலத்தை பாதுகாப்பதுடன், இயற்கையான முறையில் காய்கறிகளை சாகுபடி செய்த மன திருப்தியும் கிடைக்கும். எனவே இந்த பதிவில் மாடித்தோட்டத்தில் வெங்காயம் பயிரிடுவதை பற்றி தெளிவாக படித்தறிவோம் வாங்க.

மாடி தோட்டத்தில் வெங்காயம் பயிரிட தேவையான பொருட்கள்:-

மாடித்தோட்டத்தில் வெங்காயம் பயிரிட (onion cultivation in tamil) தேவையான பொருட்கள் என்று பார்த்தால் grow bags அல்லது தொட்டி, அடியுரமாக இடுவதற்கு சிறிதளவு மண், மக்கிய தென்னை நார் கழிவுகள், செம்மண், மண்புழு உரம், பஞ்சகாவிய, வேப்பம் பிண்ணாக்கு போன்றவைகள் தேவைப்படும்.

பின் விதை வெங்காயம் அல்லது விதை மற்றும் தண்ணீர் தெளிக்க உதவும் பூவாளி தெளிப்பான் போன்றவைகள் மாடித்தோட்டத்தில் வெங்காயம் பயிரிடுவதற்கு தேவைப்படும்.

தொட்டிகள்:

மாடி தோட்டம் வெங்காயம் சாகுபடி (onion cultivation in tamil) பொறுத்தவரை விதை வெங்காயத்தை நேரடியாக ஊன்றலாம் அல்லது கோவை வேளாண் கல்லூரியில் கிடைக்கும் விதைகளை விதைக்கலாம். விதைகளை முதலில் குழிதட்டில் விதைத்து பின் தொட்டிகளுக்கு மாற்ற வேண்டும்.

இதன் இடைவெளியானது தேர்வு செய்யும் பைகளை பொறுத்து மாறுபடும். விதையை சிறிது ஆழத்தில் ஊன்ற வேண்டும். வெங்காய நாற்றுகளின் வேரில் மண் உதிர்ந்து போனாலும், வேர் கொஞ்சம் சேதாரம் ஆனாலும் எடுத்து நட்ட பிறகு எளிதாக வேர் பிடித்து வளர்ந்து விடும்.

நீர் நிர்வாகம்: மாடி தோட்டத்தில் வெங்காயம் சாகுபடி 

மாடி தோட்டம் வெங்காயம் சாகுபடி (onion cultivation in tamil) பொறுத்தவரை விதை வெங்காயத்தை ஊன்றிய உடன் பூவாளி கொண்டு நீர் பாய்ச்ச வேண்டும்.

நாற்றுகளாக இருந்தால் ஊன்றியவுடன் நீர் பாய்ச்ச வேண்டும். தினம் ஒருமுறை காலை அல்லது மாலை வேளையில் நீர் ஊற்ற வேண்டும்.

உரங்கள்:

மாடித்தோட்டம் வெங்காயம் சாகுபடி (onion cultivation in tamil) பொறுத்தவரை பஞ்சகாவ்யா உரத்தை மேல் தெளிப்பாக தெளிக்கலாம். இரண்டு லிட்டர் தண்ணீரில் ஒரு கையளவு சாணத்தை கரைத்து வாரம் ஒரு முறை ஊற்ற வேண்டும்.

பாதுகாப்பு முறைகள்:

மாடி தோட்டம் வெங்காயம் சாகுபடி (onion cultivation in tamil) பொறுத்தவரை இதில் நோய் மற்றும் பூச்சி தாக்குதல் அதிகம் இருக்காது.

வேப்பம் புண்ணாக்கை ஊறவைத்து வடிகட்டிய நீருடன் வேப்ப எண்ணெய் 3 மிலி (ஒரு லிட்டர் தண்ணீரில்) கலந்து தெளிக்க வேண்டும். இதன் மூலம் பூச்சிகள் காணப்பட்டால் கட்டுப்படுத்தப்படும்.

அறுவடை:

மாடி தோட்டம் வெங்காயம் சாகுபடி (onion cultivation in tamil) பொறுத்தவரை நாற்று மூலம் நட்டால், நான்கு மாதத்தில் விளைச்சல் எடுக்கலாம். வெங்காயத்தை நேரடியாக விதைக்கும் போது இரண்டு-இரண்டரை மாதத்திலேயே விளைச்சல் எடுக்கலாம். செடியின் பச்சை நிறம் போய், லேசாய் பழுப்பாக ஆரம்பிக்கும் போது அறுவடை செய்யலாம்.

வெங்காயம் செடியின் மேல்பரப்பிலேயே தெரியும். அதையும் கொஞ்சம் கவனித்து, நல்ல திரட்சியாக தெரியும் போது அறுவடை செய்ய வேண்டும். ஒரே தடவையில் மொத்தமாய் அறுவடை செய்ய வேண்டியதில்லை.

நல்ல திரட்சியான வெங்காயத்தை மட்டும் அறுவடை செய்துவிட்டு மற்ற செடிகளுக்கு நீர் ஊற்றி வந்து இரண்டு வாரம் கழித்து மிச்ச செடிகளை அறுவடை செய்யலாம். இவ்வாறு அறுவடை செய்வதால் நன்கு திரண்ட வெங்காயம் கிடைக்கும்.

பயன்கள்
  • நான்கு அல்லது ஜந்து வெங்காயத்தை தோலை உரித்து அதோடு சிறிது வெல்லத்தைச் சேர்த்து அரைத்து சாப்பிட பித்தம் குறையும், பித்த ஏப்பம் மறையும்.
  • வெங்காயச் சாறு வயிற்றுக் கோளாறுகளை நீக்கும். இதை மோரில் விட்டுக் குடிக்க இருமல் குறையும். வெங்காயத்தை வதக்கி வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர நரம்புத் தளர்ச்சி குணமாகும்.
  • வெங்காயம் வயிற்றிலுள்ள சிறுகுடல் பாதையை சுத்தப்படுத்துகிறது. ஜீரணத்துக்கும் உதவுகிறது.
  • வெங்காயம் ரத்த அழுத்தத்தை குறைக்கும் மற்றும் இழந்த சக்தியை மீட்டு தரும் தன்மை கொண்டது.
  • வெங்காயத்தை அரைத்து முன் நெற்றி, பக்கவாட்டு நெற்றியில் பற்றுப் போட தலைவலி குறையும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here