இலகுவான முறையில் மிளகு ரசம் எப்படி வைப்பது ! ரகசியம் இதுதான்

0
577
மிளகு ரசம் வைப்பது எப்படி?
மிளகு ரசம் வைப்பது எப்படி?

மிளகு ரசம் வைப்பது எப்படி? | milagu rasam seivathu eppadimilagu rasam seivathu eppadi : – நம் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் மிளகு ரசம் மற்றும் தழை ரசம் ஆகிய சுவைமிக்க ரசங்களை எப்படி செய்வது, உங்களுக்குத் தெரியுமா…?

இங்கே அதற்கான செய்முறையை தொடர்ந்து படித்தறியலாம்!, மிளகு ரசம் வைப்பது எப்படி?

மிளகு ரசம் | மிளகு ரசம் வைப்பது எப்படி

தேவையான பொருட்கள்:
மிளகு – 2 ஸ்பூன்
சீரகம் – 1 ஸ்பூன்
கொத்தமல்லி விதை – 1/2 ஸ்பூன்
மிளகாய் வற்றல் – 2
புளி – சிறிதளவு
தக்காளி – 1
மஞ்சள் தூள் – சிறிதளவு
கறிவேப்பிலை – சிறிது
உப்பு – சுவைக்கேற்ப

செய்முறை:

மிளகு, சீரகம், மிளகாய் மற்றும் கொத்தமல்லி யை சிறிது நெய்யுடன் வறுக்கவும். ஆறிய பின் சிறிதளவு தண்ணீர் விட்டு அரைத்துக்கொள்ள வேண்டும். புளியை கரைத்து வடிகட்டி வைத்துக்கொள்ள வேண்டும்.

கடாயில் சிறிது நெய் ஊற்றி கடுகு, புளிக் கரைசல், அரைத்த கரைசல், பொடியாக நறுக்கிய தக்காளி, மஞ்சள் தூள், கறிவேப்பிலை மற்றும் உப்பு சேர்த்து கொதிக்க வைக்கவும். நுரை கட்டியவுடன் இறக்கிவிட வேண்டும். சுவையான மிளகு ரசம் ரெடி

தழை ரசம்

தேவையான பொருட்கள்:

சீரகம், மிளகு, கொத்தமல்லி விதைகள், துதுவாலை, வெலிபுருத்தி, வத்நாராயணன், கர்புர்வள்ளி, துளசி, திருநெத்தப்பாலை, காசிதும்பை, கருதுமை, வெற்றிலை, பர்கனி, முசுமுகுக்கி

செய்முறை:

இந்த கீரைகளின் கொழுந்தினை மட்டும் பயன்படுத்தவும். இதில் முசுமுசுக்கையை கொஞ்சம் அதிகமா சேர்த்துக்கொள்ளலாம். (அதாவது முதலில் வரும் 4, 6 இலைகள் மட்டும்.

இலைகள் அல்லது இரண்டு இல்லை என்றால் அது ஒரு விஷயமே இல்லை, நீங்கள் என்ன அதை செய்ய முடியும். இந்த இலைகளை நீரில் கழுவி, நன்கு வடிகட்டிக் கொள்ளவும்.

பின்னர் ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு லேசாக வதக்கவும். அதில் உப்பு சேர்த்து சிறிது வதக்கி எடுத்துக்கொள்ளவும். கொத்தமல்லி, சீரகம், மிளகு ஆகியவற்றை நல்லெண்ணெயில் வறுக்கவும்.

இதை வதக்கிய கீரையுடன் சேர்த்து அனைத்தையும் நன்கு விழுதாக அரைக்கவும். போதுமான அளவு தண்ணீர் நுரைத்து இறக்கும் வரை கொதிக்க வைக்கவும். (இதற்கு தக்காளி, தாளிதம் எதுவும் தேவையில்லை)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here