வீட்டு வாசலில் மாவிலை கட்டுவது எதற்காக என்று தெரியுமா ?

0
512
மாவிலை தோரணம் கட்டுவது ஏன் Maavilai Thoranam in

வீட்டு வாசலில் மாவிலை கட்டுவது எதற்காக என்று தெரியுமா ?

மாவிலை தோரணம் கட்டுவது ஏன்?

வேப்பமரம், அரசமரம் ஆகியவற்றுக்கு ஆன்மீகத்துக்கும் நிறைய தொடர்புகள் இருந்தாலும் கூட முக்கிய தினங்களில் வீட்டின் வாயிலில் மா மரத்தின் இலைகளைத் தோரணமாகக் கட்டுகிறோம். வேப்பமரம், அரசமர இலைகளை வீட்டு வாசிலில் கட்டாமல் மா மர இலைகளை மட்டும் ஏன் கட்டுகிறார்கள் என தெரியுமா?

காலங்காலமாக நம்முடைய முன்னோர்கள் இதை செய்து வருவதால் நாமும் ஏன் எதற்கு என்று காரணம் தெரியாமலேயே அதை நாமும் பின்பற்றத் தொடங்கிவிட்டோம். நம்மில் யாருமே ஏன் வீட்டு வாசலிலில் மாவிலை தோரணம் கட்டுகிறோம் என்று தெரிந்து கொள்வதில்லை. சரி ஏன் மாவிலை தோரணம் கட்டுகிறார்கள் என்று தெரிந்து. கொள்வோமா

மாவிலை கட்டுவதற்கு என்ன காரணம்?

மாவிலைகள் மிகவும் புனிதமான பொருளாக கருதப்படுகிறது. மாவிலை நம்முடைய வீட்டில் உள்ள நெகட்டிவ் எனர்ஜியை வெளியேற்றுமாம். அதே போல மாவிலை பாசிடிவ் பாக்டீரியாக்களை உற்பத்தி செய்கிற ஆற்றல் கொண்டதால் தீமை விளைவிளைவிக்கும் பாக்டீரியாக்களில் இருந்து நம் வீட்டை பாதுகாக்கிற ஆண்டி பாக்டீரியலாகப் பயன்படுகிறது.

கலசங்கள்( மாவிலை தோரணம் கட்டுவது ஏன் Maavilai Thoranam in )

கோவில்களிலோ, வீட்டிலோ பூஜை செய்யும்போது வைக்கப்படும் கலசங்களில் மா இலைகளைச் சொருகி வைப்பார்கள். அதில் மஞ்சள் மற்றும் குங்குமத்தைத் தெளிப்பார்கள். இந்து மதத்தில் இது மிக முக்கிய சடங்காகப் கடைபிடிக்கப்படுகிறது.

கடவுள் அவதாரங்கள்

மாம்பழமும்மா மர இலைகளும் பல கடவுள்களின் அவதாரங்களோடு இந்து மதத்தில் தொடர்பு படுத்தப்படுத்தப்படுகிறது. வீடுகளில் மாவிலைத் தோரணங்கள் கட்டுவது பார்வதிசிவபெருமானின் பிள்ளைகளாகிய பிள்ளையார் மற்றும் முருகப் பெருமானை சுட்டிக்காட்டுகிறது.

மரபு ( மாவிலை தோரணம் கட்டுவது ஏன் Maavilai Thoranam in)

நம் வீட்டில் நடக்கும் எல்லா சுபகாரியங்களிலும் மாவிலைகள் தவறாமல் இடம் பெற்றிருப்பதை நாம் பார்த்திருப்போம். சுப காரியம் நடக்கும் போது மட்டுமல்ல பொதுவாக எல்லா நாட்களிலும் மாவிலை தோரணம் கட்டலாம். திருமண வீடுகளில் கட்டும்போது மணப்பெண்மணமகன் மற்றும் அவர்களுக்குப் பின்னால் வரும் சந்ததியினருக்கும் இது ஆசியை வழங்கவல்லது. மாவிலை கட்டுவது என்பது கடவுளே அந்த வீட்டைக் நேரடியாக காத்துக் கொண்டிருக்கிறார் என நம்பப்படுகிறது.

மகாலட்சுமி

மாவிலையில் மகாலட்சுமி வாசம் செய்வதாக ஐதீகம். அது கெட்ட சக்திகளை வீட்டுக்குள் விடாமல் விரட்டி நல்ல பலன்களைக் கொடுக்கும் என்று நம்பப்படுகிறது.

அதே போல வீட்டு வாசலில் கட்டியிருக்கும் மாவிலைகளை நன்றாக கவனித்து பார்த்தால் அது மற்ற இலைகளைப் போல அவ்வளவு எளிதில் காய்ந்து போகாது. மாவிலையானது பசுமையை தன்னுள் அதிகமாக தக்க வைத்திருக்கும் ஒரு தாவரம்.

மாவிலையானது அது கட்டப்படும் இடத்தை சுற்றிலும் சுத்தமாகவும் ஆரோக்கியமானதாகவும் வைத்திருக்கும். இதனாலயே நம் முன்னோர்கள் வீட்டு வாயில்களில் மாவிலை தோரணம் கட்டுவதை வழக்கமாக கொண்டிருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here