வெண்டைக்காய் சாகுபடி செய்வது எப்படி

0
315
வெண்டைக்காய் சாகுபடி

மாடித்தோட்டம் வெண்டைக்காய் சாகுபடி முறை..!

வணக்கம். இன்று நாம் மாடித்தோட்டம் பதிவில் வெண்டைக்காய் சாகுபடி முறையை பற்றி இந்த பகுதியில் நாம் படித்தறிவோம் வாங்க. அதாவது நம்ம மாடி தோட்டத்தில் மிகவும் எளிமையாக வெண்டைக்காய் சாகுபடி முறை, பராமரிப்பு முறை மற்றும் பாதுகாக்கும் முறை ஆகியவற்றை இந்த பகுதியில் நாம் மிகவும் தெளிவாக படித்தறிவோம் வாங்க.

தொட்டிகள்:

மாடித்தோட்டம் வெண்டை சாகுபடி பொறுத்தவரை, சிறிய பை அல்லது தொட்டிகள் போதுமானது.

தொட்டிகளை நிரப்புவதற்கு தேங்காய் நார் கழிவுகள் இரண்டு பங்கு, சமையலறை கழிவுகள் ஒரு பங்கு, மாட்டுச்சாணம் ஒரு பங்கு ஆகியவற்றை கொண்டு தொட்டிகளை நிரப்ப வேண்டும்.

இந்த கலவையை தயார் செய்தவுடனே விதைகளை விதைத்துவிட கூடாது, 7-10 நாட்கள் கழித்து, பின்பு தான் விதை நேர்த்தி செய்து விதைக்க வேண்டும்.

மாடித்தோட்டத்தில் வெண்டைக்காய் செடிகளை வளர்ப்பதற்காக, பை அல்லது தொட்டிகளில் மணல் கலவை நிரப்பும் போது, பை முழுவதும் மணல் கலவையை நிரப்பிவிட்டு கூடாது பையின் நீளத்திற்கு ஒரு அங்குலத்திற்குக்கீழ் இருக்குமாறு மணல் கலவையை நிரப்ப வேண்டும்.

மாடித்தோட்டம் வெண்டைக்காய் சாகுபடி விதை விதைத்தல்:-

மாடித்தோட்டம் வெண்டைக்காய் சாகுபடி (okra cultivation) பொறுத்தவரை நோய் தாக்காத ஆரோக்கியமான விதைகளை தேர்வு செய்து, விதை விதைக்க வேண்டும். பின்பு பைகளில் விதைகளை விதைத்து தங்கள் கைகளால் கிளறி விட வேண்டும்.

நீர் நிர்வாகம்:

மாடித்தோட்டம் வெண்டைக்காய் சாகுபடி (okra cultivation) பொறுத்தவரை விதை விதைத்த பின்பு, பூவாளியால் நீர் தெளிக்க வேண்டும். பின்பு இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் தெளிக்க வேண்டும்.

உரங்கள்:

செடியைச் சுற்றி அடி மண்ணை வாரம் ஒருமுறை கொத்தி விட வேண்டும். மண்ணை கொத்தி விடாமல் தொடர்ந்து தண்ணீர் ஊற்றுவது பயன் அளிக்காது.

வெண்டையில் முற்றிய பெரு இலைகளையும், பழுத்த இலைகளையும் அடிக்கடி நீக்க வேண்டும். இதனால் நோய் தாக்கும் அபாயம் குறையும்.

பூச்சி தாக்குதலை தவிர்க்க வாரம் ஒரு முறை வேம்பு பூச்சிவிரட்டியை 2 மில்லி என்ற அளவில் 1 லிட்டர் நீரில் கரைத்து, மாலை வேளையில் செடிகளில் மேல் தெளிக்க வேண்டும்

அறுவடை:

காய்கள் பிடிக்க ஆரம்பித்த உடன் சரியான பருவத்தில் காய்களை முற்றவிடாமல், பறித்துவிட வேண்டும்.

வெண்டைக்காயின் பயன்கள்:
  • குழந்தையின் மூளை மற்றும் முதுகெலும்பு வளர்ச்சிக்கும் பிறப்பு குறைபாடுகளை தடுக்கவும் தேவையான போலிக் அமிலம் வெண்டைக்காயில் நிறைந்து காணப்படுகிறது. எனவே கர்பிணிப்பெண்கள் அதிக அளவு வெண்டைக்காய் உண்ணவேண்டும்.
  • பிஞ்சு முருங்கைக்காயை தொடர்ந்து உண்ணும்பொழுது புற்றுநோய் வருவதை தடுக்கலாம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
  • பெண்களுக்கு அதிக அளவு உஷ்ணத்தினால் ஏற்படும் வயிற்று வலியை போக்க பிஞ்சு வெண்டைக்காய் விதைகளை 5 கிராம் அளவுக்கு சாப்பிட்டு வரவேண்டும்.
  • பிஞ்சு வெண்டைக்காயை நன்றாக கழுவிவிட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி சர்க்கரை சேர்த்து சாப்பிட்டால் உடன் குளிர்ச்சியடையும்.
  • பிஞ்சு வெண்டைக்காயில் உள்ள அதிக அளவு வேதிச்சத்துக்கள் ரத்த கட்டிகள் உருவாகுவதை தடுக்கும் வல்லமை உடையது. மூளைக்கு நல்ல நினைவாற்றலையும், மூளை செயலிழப்பையும் தடுக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here