அவகோடா பழத்தின் நன்மைகள்..! Avocado Fruit Benefits..!

0
294
அவகோடா பழத்தின் நன்மைகள்

வெண்ணெய் பழத்தின் நன்மைகள்..! Avocado Fruit Benefits In Tamil..!

அவகோடா பழத்தின் நன்மைகள் Avocado Benefits Health: ஹலோ ஃப்ரண்ட்ஸ்..! பதிவில் அவகோடா பழத்தின் நன்மைகளை பற்றி இன்றைய பதிவில் பார்க்க போகிறோம். இந்த அவகோடா பழம் சருமத்தை பாதுகாக்கக்கூடிய ஒன்றாகும். அவகோடா பழத்தில் அதிகமாக வைட்டமின் சத்துக்கள் நிறைந்துள்ளது. ஆரோக்கியமான சருமத்தை பெற இந்த அவகோடா பழம் முதன்மை இடத்தில் உள்ளது. சரி வாங்க நண்பர்களே இப்போது அவகோடா பழத்தில் இருக்கும் நன்மைகள் சிலவற்றை முழுமையாக படித்து தெரிந்துக்கொள்ளுவோம்..!

இரத்த கொதிப்பு, சீறுநீரக பிரச்சனை நீங்க அவகோடா:

நம் உடலுக்கு அவசியம் தேவைப்படும் மினரல் சத்து பொட்டாசியம். அவகோடா பழத்தில் அதிகமாக பொட்டாசியம் நிறைந்துள்ளது. பொட்டாசியம் சத்து நிறைய கிடைப்பதால் உடலில் இரத்த கொதிப்பு, நெஞ்சு வலி, சீறுநீரகத்தில் ஏற்படும் பிரச்சனைகளை இந்த அவகோடா பழத்தில் இருக்கக்கூடிய பொட்டாசியம் சத்துக்கள் நீக்கிவிடும்.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் அவகோடா:

அவகோடா பழத்தில் நிறைய வைட்டமின் மற்றும் மினரல் சத்துக்கள் அடங்கியுள்ளது. நம் உடலுக்கு தேவைப்படும் வைட்டமின் சி சத்துக்கள் கிடைக்கின்றது. குறிப்பாக இந்த பழத்தில் வைட்டமின் பி 6 நிறைந்து இருக்கிறது. வைட்டமின் பி 6 அதிகமாக இருப்பதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கக்கூடும்.

தாய்மார்கள் உண்ணக்கூடிய அவகோடா:

கருவுற்ற பெண்கள் இந்த அவகோடா பழத்தை தாராளமாய் சாப்பிடலாம். அவகோடா பழத்தில் போலிக் எனும் வைட்டமின் அதிகமாக உள்ளது. இந்த போலிக் வைட்டமின் தாயிற்கும் வயிற்றில் இருக்கக்கூடிய குழந்தையின் வளர்ச்சிக்கு மிகவும் உதவியாக உள்ளது.

நார்ச்சத்து அடங்கிய அவகோடா:

அவகோடா பழத்தில் அதிகமான நார்ச்சத்துக்கள் இருக்கிறது. இந்த பழத்தை நாம் சாப்பிட்டு வருவதால் நம் உடலுக்கு தேவையான நார்ச்சத்துக்கள் கிடைக்கின்றது.

கொழுப்புகளை கரைக்கும் அவகோடா:

இந்த பழத்தில் இருக்கக்கூடிய பல வைட்டமின் சத்துக்கள் கொழுப்புகளை குறைக்கும். வைட்டமின் எ, டி, கே, இ போன்றவைகள் கொழுப்புகளை கரைக்கும் வைட்டமின்கள் ஆகும். இந்த வைட்டமின் சத்துக்கள் அனைத்தும் நாம் அன்றாட உணவுகளில் கிடைக்கக்கூடிய ஒன்றாகும்.

மூளை திறனை அதிகரிக்க அவகோடா:

அவகோடா பழத்தில் Omega 3, Fatty அமிலம், வைட்டமின் எ சத்துக்கள் அதிகமாக அடங்கியுள்ளது. இந்த பழத்தை சாப்பிடுவதால் நமது மூளையானது அதிகமாக செயல்படும் ஆற்றல் வாய்ந்தது. அவகோடா நம் மூளையின் முக்கியமான பகுதியான “Prefrontal Cortex” எனும் பகுதிக்கு இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. இந்த பழத்தின் நன்மைகள் அதிகமாக சிந்திக்க தூண்ட செய்கிறது.

இருதய நோயை குணப்படுத்தும் அவகோடா:

நம் உடலுக்கு தேவைப்படும் கொழுப்பு சத்துக்கள் இந்த பழத்தில் அடங்கி இருக்கு. இந்த கொழுப்பானது மோனோசாச்சுரேடட்(Monosaturated) என்று சொல்லக்கூடிய கொழுப்பு வகையாகும். இந்த கொழுப்பு உடலில் இருக்கும் கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கும் சக்தியை பெற்றுள்ளது. குறிப்பாக இந்த பழம் சாப்பிட்டு வந்தால் இருதய சம்பந்தமான  பிரச்சனைகள் வருவதை தடுத்து நிறுத்தும்.

கண்கள் ஆரோக்கியமாக இருக்க அவகோடா:

அவகோடா பழத்தில் “Lutein” மற்றும் “Zeaxanthin” அடங்கியுள்ளது. இவை இரண்டும் நம் கண்களை பாதுகாப்பாக வைத்திருக்க உதவுகிறது. நாம் வெளியில் வெயிலில் செல்லும்போது நம் கண்களின் மீது கதிர்வீச்சுகள் படாதவாறு இருக்க இந்த அவகோடா பழம் உதவியாக உள்ளது.

ஆர்த்ரடிஸ் நோய் குணமாக அவகோடா பழம்:

அவகோடா பழத்தில் அதிகமாக வைட்டமின் சி, இ அடங்கியுள்ளது. இந்த வைட்டமின் சத்துக்களால் நம் உடல்களில் ஏற்படக்கூடிய கை, கால் வீக்கங்களை குறைத்துவிடும். இது போன்று வருவதால் தான் உடலில் ஆர்த்ரடிஸ் போன்ற நோய்கள் வருகிறது. ஆர்த்ரடிஸ் நோய் வராமல் தடுக்க தினமும் அவகோடா பழத்தை எடுத்துக்கொண்டால் இந்த நோய் விரைவில் குணமாகும்.

உடல் எடை குறைய அவகோடா:

உடல் எடை அதிகமாக உள்ளவர்கள் அவகோடா பழத்தை தாராளமாய் உண்ணலாம். இந்த பழத்தில் இருக்கக்கூடிய Monosaturated, Fatty அமிலம் உடலில் இருக்கக்கூடிய தேவையற்ற கொழுப்புகளை நீக்கிவிடும். கவனிக்க வேண்டியவை இந்த பழம் சாப்பிட்டால் அதிக நேரம் பசி இருக்காது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here