திறமைக்கு நேரம் ஒரு தடையில்லை: வல்லவனுக்கு வாய்த்தது எல்லாம் ஆயுதம் தான்

admin

Editorial Team

மனிதன் பார்வையாளர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

நம்மில் பலர் ஒரு செயலை செய்வதற்கு நேரத்தை ஒரு தடையாக சொல்வோம். நேரம் போதாததால் தான் இந்த இடத்தில் எனது திறமையை நிருபிக்க முடியவில்லை என சொல்வதுண்டு. ஆனால் உலகில் எத்தனையோ திறமைசாலிகள் தங்களல் திறமையை நிருபிக்க கிடைக்கும் சிறிது நேரத்தை கூட சரியாக பயன்படுத்தி கொள்வர்.

அந்த வகையில் இங்கு ஒரு பெண் பரபரப்பான சாலையின் சந்திப்பில் சிக்னல் போடும் அந்த குறுகிய நேரத்தில் சாலையின் இருபுறமும் கயிறு கட்டி அதன் மேல் ஏறி நின்று Juggling என்று சொல்லப்படும் இரண்டுக்கும் மேற்பட்ட பொருட்களை ஒரே நேரத்தில் இரு கைகளிலும் தூக்கி விளையாடும் வித்தையை காண்பித்தார்.

அவரது கைகள் மட்டுமல்ல ஒரு கால் கயிறில் நின்றபடியும், மற்றொரு காலில் வளையத்தை சுற்றியபடியும் தனது வித்தையை காண்பித்து மீண்டும் சிக்னல் போடுவதற்குள் அங்கிருந்து கிளம்பி விட்டார். அவரது வித்தையை நீங்களே பாருங்கள்.

 

<

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

YouTube இல் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்