அப்பல்லோவில் தனக்கு நடந்தது இதுதான்!!… கண்கலங்கும் ஜெயலலிதா

admin

Editorial Team

ஆவியுடன் பேட்டி என்று கூறியவுடன் ஏராளமானவர்கள் , “இதைக் கேளுங்கள்” என்று ஆர்வத்துடன் கேள்விகளை அனுப்பினார்கள். கேள்விகளுடன், “ஆவி” ராஜா என்கிற மீடியேட்டரை சந்தித்தித்தார்கள். அவர் “ஆவி நேரடியாக பேசாது. ஒருவரது உடலில் புகுந்து தான் பேசும்., அதுவும் நான் தான் கேள்விகளைக் கேட்க முடியும். எனவே என்னிடம் கேள்விகளைக் கொடுங்கள், நான் கேட்கிறேன் என்றார்.


மேலும் சிறிது நேரம் தான், ஒரு உடலில் ஆவி தங்கும், ஆகவே இத்தனை கேள்விகள் கேட்க முடியாது” என்றார் ஆவி ராஜா. அவரே கேள்விகளைத் தேர்ந்தெடுத்து கேட்பதாகவும் சொன்னார்.


ஆனைத்திற்கும் ஒப்புக்கொண்டு ஆவியுடனான பேட்டிக்குத் தயாராகி சென்றனர்.
ஒரு அறையில் கதவுகள் சாத்தப்பட்டு, மெல்லிய விளக்கொளியில், ஆவி உடலில் புகுந்து பேசுவதற்கான பெண்மணியை, கட்டிலில் படுக்க வைத்தார் “ஆவி” ராஜா. கண்களை மூடி ஜெபிக்க தொடங்கினார்.


பிறகு மெல்லிய குரலில் அந்த பெண்ணிடம், சில மந்திரங்களைக் கூறினார். அடுத்தாக ஜெயலலிதாவின் ஆவியை அழைத்தார்.
அதுவரை கண்களை மூடிப்படுத்திருந்த அந்த பெண்ணின் உடல் திடுமென தூக்கிப்போட்டது. ஹூம்.. ஹூம்.. என்று உதட்டைக் கோணலாக்கி முனக ஆரம்பித்தாராம்.
அடுத்து முனகலாக, “நான் ஜெயலலிதா வந்திருக்கேன்” என்றும் கூற ஆவி ராக தனது உரயாடலை தொடங்கினார்..
இனி நடந்த உரையாடல்…


அம்மா அவர்களுக்கு வணக்கம். நீங்கள் இங்கே வந்ததற்கு மிகவும் நன்றி. இப்போது உங்களிடம் சில கேள்விகள் கேட்க எங்களை அனுமதிக்க வேண்டும்.
ஜெயலலிதா : நீங்க யாரு?
“ஆவி” ராஜா: நான் ராஜா ,ஆவிகளிடம் தொடர்பு கொள்பவர்.
ஜெயலலிதா : என்னை ஏன் அழைத்தீர்கள்?
“ஆவி” ராஜா: நாட்டில் மக்கள் பல குழப்பங்களுக்கு உள்ளாகி வருகிறார்கள். ஆதலால் தாங்கள் விளக்கம் அளிக்க உங்களை அழைத்துள்ளேன்
ஜெயலலிதா : என்ன விளக்கம்?
“ஆவி” ராஜா: மருத்துவமனையில் சேர்ந்த நாளன்று உங்களுக்கும் உங்களது உடன் பிறவா சகோதரி சசிகலாவுக்கும் சண்டை நடந்ததாக கூறப்படுகிறது. அதை பற்றி தாங்கள் தெளிவாக சொல்ல வேண்டும்.
ஜெயலலிதா : எங்களுக்குள் சண்டை எதுவும் இல்லை. உடல் நலம் கெட்டுருச்சு. மயக்கம் போட்டு விழுந்துட்டேன். தொண்டையில வலி. மருத்துவமனையில் இருந்தேன். சசி என் கூட தான் இருந்தா.
“ஆவி” ராஜா: நீண்ட நாட்கள் மருத்தவமனையில் சிகிச்சையில் இருந்தீர்கள். சிகிச்சை குறித்து பல்வேறு சந்தேகங்கள் கூறப்படுகின்றன, அங்கு என்ன நடந்தது என்பதை கூறுங்கள்?
ஜெயலலிதா : அங்க டிரீட்மென்ட் நடந்தது அவ்வளவு தான், வேற எதுவும் இல்லை. சிகிச்சையில் நடந்ததால் மயக்கத்தில் இருந்தேன் நினைவு இல்லை.
“ஆவி” ராஜா:உங்கள் பிராமன ஜாதி சடங்குகளின் படி இறுதி சடங்குகள் செய்யப்படவில்லை என்று குற்றச்சாட்டு சொல்லப்படுகிறது. உங்கள் ஆன்மா சாந்தி அடைந்ததா, தங்கள் ஜாதி வழக்கப்படி சடங்குகள் செய்ய வேண்டும் என்றால் சொல்லுங்கள், செயல்படுத்துகிறோம்.
ஜெயலலிதா : அது,நடக்க வேண்டிய நேரத்தில் நடக்கும்.மேலும்,எனக்கு யாரும் இல்லாததால் என் தோழி செய்தார், அவ்வளவு தான். மற்றபடி வேறு ஒன்றும் இல்லை. அவருடைய கடமையை அவர் செய்தார். இதற்கு மேல் எதுவும் கேட்க வேண்டாம்.
“ஆவி” ராஜா: கடைசியாக நீங்கள் யாரிடம் என்ன பேச வேண்டும் என்று ஆசைப்பட்டீர்கள்….
ஜெயலலிதா : மக்கள். மக்கள்
“ஆவி” ராஜா: நடிகர் அஜீத்தை நீங்கள் சந்திக்க விரும்பினீர்களா, அவரை உங்கள் அரசியல் வாரிசாக ஆக்க ஆசைப்பட்டீர்களா?
ஜெயலலிதா : இல்லை, அவர் ஒரு சினிமா நடிகர். அவர் நடித்த படத்தை பார்த்து பாராட்டத்தான் அவரை அழைத்தேன். மற்றபடி அரசியலுக்காக நான் யாரையுமே அழைக்கவில்லை.
“ஆவி” ராஜா:அடுத்த பிறவி எப்போது எங்கே எடுப்பீர்கள்
ஜெயலலிதா :நான் இங்கிருந்து செல்லவே நீண்ட நாட்களாகும். எனக்கு இங்கேயே நிறைய கடமைகள் இருக்கின்றன. யார் மூலமாவது அவற்றை நிறைவேற்றிவிட்டு தான் செல்ல வேண்டும். அதுவரை இங்கேயே தான் இருப்பேன்.
“ஆவி” ராஜா:நீங்கள் எடுத்த பல முடிவுகளுக்கு.. கருத்துக்களுக்கு.. எதிரான முடிவை முதல்வர் பன்னீர் செல்வம் எடுத்து வருவதாக ஒரு கருத்து உள்ளதே அது பற்றி..
ஜெயலலிதா : அவர் நல்ல மனிதர். மாற்று கருத்து என்பது சூழ்நிலையை பொறுத்தது. ஆகையால் அவர் மாறிவிட்டார், மாறவில்லை என்ற பேச்சுக்கே இடமில்லை.
“ஆவி” ராஜா: தீபா.. தீபக் இவர்கள் இருவரும் அரசியலுக்கு வரவேண்டும் என நீங்கள் விரும்புகிறீர்களா?
ஜெயலலிதா : அது அவர்கள் விருப்பம். நான் யாரையும் கூறவில்லை. எனது இடத்தில் இருந்து சசிகலா பார்த்துக் கொள்வார்., ஓபிஎஸ் உறுதுணையாக இருப்பார், இது தான் முடிவு…
“ஆவி” ராஜா: சசிகலா பொதுச் செயலாளர் மற்றும் முதலமைச்சர் ஆகலாமா?
ஜெயலலிதா :என்னுடன் 30 வருடங்களுக்கு மேல் இருந்துள்ளார். அரசியல் பற்றி நன்கு அறிவார், வருவதும் வராததும் அவர் விருப்பம். மற்றபடி வேறு ஒன்றுமில்லை.
“ஆவி” ராஜா:நீங்கள் இருக்கும் போது உங்கள் ஒவ்வொரு நடவடிக்கைக்கும் போஸ்டர்கள் அடிக்கப்படும். உடல் நல குன்றிய பிறகு, மறைந்த பிறகு போஸ்டர்கள் இல்லையே?
ஜெயலலிதா : எல்லோரும் அதிர்ச்சியில் இருந்தார்கள், அது தான் உண்மை. என்ன செய்வது என்று புரியவில்லை. அடுத்து என்ன செய்வது என்று புரியாத நிலையில் தடுமாறி கொண்டிருந்தார்கள்.
நான் யாரையும் குற்றம் சொல்ல விரும்பவில்லை.
எனக்காக என் மக்கள் அழுதார்கள். அது ஒன்றே எனக்கு போதும்.. போதும்..போதும்.. (அழுகிறார். பிறகு…) நான் செய்த நல்லவைகளுக்கு என் மக்கள் போதும்.. போதும்.. (அழுகிறார்.)
“ஆவி” ராஜா:சாந்தமாக இருங்கள்.. நீங்கள் இந்த உடலை விட்டு நிதானமாக,வெளியேறும் படி கேட்டுக் கொள்கிறேன்..
ஜெயலலிதா : (இருமுகிறார்)…
அந்த பெண்ணின் உடல் லேசாக துள்ளுகிறது. முனகுகிறார். பிறகு இயல்பு நிலைக்கு வருகிறார். தற்போது இந்த தகவல் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

YouTube இல் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்