கத்தியுடன் நுழைந்த திருடர்களை கதிகலங்கி ஓட வைத்த துணிகரப் பெண்! கமெராவில் சிக்கிய சம்பவம்!

admin

Editorial Team

பிரித்தானியாவில் இந்திய வம்சாவளி பெண் ஒருவர் தனது கடையில் கத்தியுடன் நுழைந்து திருட முற்பட்ட நபர்களை ஓட ஓட விரட்டிய சம்பவம் வீடியோவாக வெளியாகியுள்ளது.

56 வயதான Hamalata Patel என்ற பெண்ணே தைரியமாக திருடர்களை எதிர்கொண்டு விரட்டியுள்ளார். கடையில் உள்ள சிசிடிவியில் பதிவான குறித்த சம்பவம் தற்போது வெளியாகியுள்ளது.

சம்பவம் குறித்து Hamalata Patel கூறியதாவது, லண்டன் Winsford பகுதியல் எங்களுக்கு K and L Newsagent கடை உள்ளது.

சம்பவத்தன்று, கடையில் யாரும் இல்லாத நேரம் பார்த்து முகமூடி அணிந்து இரண்டு திருடர்கள் நுழைந்தனர்.

உடனே நான் உங்களுக்கு என்ன வேண்டுமோ எடுத்துக் கொள்ளுங்கள் என்று கூறினேன். ஆனால், அதில் ஒருவன் திடீரென கத்தியை எடுத்து கடையை சேதப்படுத்த தொடங்கினான்.

இதைக்கண்டதும் எனக்கு கோபம் வந்துவிட்டது. உடனே என்ன நடந்தாலும் சரி என்று கடையிலிருந்து இரும்பு நாற்காலியை எடுத்துக்கொண்டு அவர்களை தாக்க ஓடினேன். இதைக்கண்ட திருடர்கள் உடனே கடையை விட்டு ஓடிவிட்டனர் என கூறியுள்ளார்.

சம்பவம் குறித்து சிசிடிவி காட்சி மூலம் விசாரணை மேற்கொண்ட பொலிசார் திருட முற்பட்ட 16 மற்றும் 14 வயதுடைய இரண்டு இளைஞர்களை கைது செய்துள்ளனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

YouTube இல் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்