உடலின் வளைவுக்கேற்ப வளையும் மாயாஜால மர பெஞ்ச் தயாரிப்பு..!

admin

Editorial Team

நமது உடலின் வளைவுக்கேற்ப வளையும் மர நாற்காலி மற்றும் படுக்கைகளை அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் இயங்கிவரும் ஸிட்ஸ்கி நிறுவனம் தயாரித்துள்ளது.

கைவினைப் பொருளான இவை சிறு சிறு துண்டு பாகங்களாக உருவாக்கப்பட்டு குஷன் மென்மையான தளத்துடன், உட்புறமாக எலாஸ்ட்டிக்கால் இணைக்கப்பட்டுள்ளது. இதன்மூலமாக, இத்தகைய வளையும் தன்மையைப் பெறுகின்றது.

மரச்சாமான்களில் அடுத்தகட்டமான வளர்ச்சியுடன் வித்தியாசமான முறையில் உருவாக்கப்பட்டுள்ள இவை, அமெரிக்க மதிப்பில் நான்காயிரம் டாலருக்கு (இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் இரண்டரை லட்சம்) விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

 

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

YouTube இல் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்