ஆரோக்கியமான ஒருவருக்கு ஒரு நாளைக்கு உடலுக்குத் தேவையான உணவு

admin

Editorial Team

காலை 6 மணி :
டீ ,காஃபி அல்லது பால் அரை கப் (100 மி.லி.) அதில் ஒரு டீஸ்பூன் சர்க்கரை மட்டுமே சேர்க்க வேண்டும்.

காலை 8 மணி :
பழைய சதம் மோர் கரைத்து,
கிழங்குக்களி ஒரு கப் 2,3இட்லி அல்லது இரண்டு தோசை, ஒரு கப் உப்புமா அல்லது ஒரு கப் பொங்கல்.3,5 இடியப்பம்,1,2 சில்லுபிட்டு இதோடு தேங்காய் சம்பல், பால்சொதி, தனி மரக்கறிக் குழம்பு சாம்பாறு வகைகளை சேர்த்துக் கொள்ளலாம்.

காலை 10,11 மணி :
மோர் ஒரு கப், அல்லது எலுமிச்சை ஜூஸ் அல்லது ஒரு கப், தக்காளி ஜூஸ் ஒரு கப் இவற்றில் ஏதாவது ஒன்றை இரண்டு டீஸ்பூன் சர்க்கரை அல்லது சிறிது உப்பு கலந்து பருகலாம்.

மதியம் 1,2 மணி :
1,2 கப் சாதத்தை கீரை,பருப்புவகையில் எதாவது ஒன்று காய்கறிகள் , ரசம் ஆகியவற்றோடு காய்கறி அல்லது மீன் போன்ற கடல் உணவுகள் குழம்பு, பொரியலுடன் கோஸ் பொரியல் இறைச்சிக் குழம்பு கலந்து சாப்பிடலாம்.

மாலை 4 மணி :
காபி, டீ குறைந்த அளவு சர்க்கரையுடன் சாப்பிடலாம்.மாம்பழம், அப்பிள் பழங்கள், கொய்யா, மாதுளை இவற்றில் ஏதாவது ஒன்றுடன் 4,5 பிஸ்கட் அல்லது வேகவைத்த சுண்டல் ஒருகப் அல்லது கடலை உளுந்துவடை 1, 2சாப்பிடலாம்.

இரவு 8 மணி :
பால் கஞ்சி கிழங்குக்களி காய்கறி சூப், எண்ணெய் இல்லாத சப்பாத்தி அல்லது பருப்பு, ஒரு கப் சாதம் அல்லது 2,3இட்லி அல்லது இரண்டு தோசை, ஒரு கப் உப்புமா அல்லது ஒரு கப் பொங்கல்.3,5 இடியப்பம்,1,2 சில்லுபிட்டு இதோடு தேங்காய் சம்பல், பால் சொதி, தனி மரக்கறிக் குழம்பு வகைகளை சேர்த்துக் கொள்ளலாம்.படுப்பதற்கு முன் ஏதாவது பழம் சாப்பிடுவதைத் தடுப்பது நல்லது.

# வாரத்துகு 2 முறை மாமிசம் தவிர்த்து தனி மரக்கறி வகைகளைச் சாப்டுவது சிறந்தது

# மாதம் 3,4 முறை இறைச்சி சப்பிடுதலே போதுமானது.

# கடல் உணவுகள் சிறந்தவை

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

YouTube இல் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்