ஆரோக்கிய வாழ்க்கைக்கு பெரிதும் உதவும் பட்டாணி..!

admin

Editorial Team

 ஆராச்சியாளர்களின் ஆராய்ச்சியின் படி, பச்சை பட்டாணியில் உள்ள Coumestrol எனப்படும் Phytonutrients புற்றுநோய்க்கு எதிராக செயல்படும் ஒன்றாகும்.

இதனை நாள்தோறும் உணவில் சேர்த்துக்கொண்டால் வயிற்று புற்றுநோய்க்கு சிறந்த மருந்தாக அமையும்.

என்னென்ன சத்துக்கள் உள்ளன..?

பச்சை பட்டாணியில் ஊட்டச்சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது. 8 விதமான உயிர்சத்துக்களும், 6 விதமான தாது உப்புகளும் மற்றும் நார்சத்து, புரதம் அதிகம் உள்ளது. புரதம் அதிகளவாக 15.5 முதல் 39.7 சதவீதம் வரை காணப்படுகிறது.

100 கிராம் பச்சை பட்டாணியில் உள்ள சத்துக்கள்

நீர்ச்சத்து 75.6 சதவீதம், புரதம் 6.2 கிராம், கொழுப்புச்சத்து 0.4 கிராம், கார்போஹைட்ரேட் 16.9 கிராம், நார்சத்து 2.4 கிராம், கால்சியம் 32 மில்லி கிராம், பாஸ்பரஸ் 102 மி.கிராம், இரும்புசத்து 1.2 மி.கிராம், சோடியம் 6 மி.கிராம், பொட்டாசியம் 350 மி.கிராம், பீட்டாகரோட்டீன் 450 மி.கிராம், தையாமின் 34 மி.கிராம்,ரிபோளேவின் 16 மி.கிராம், நியாசின் 2.7 மி.கிராம், அஸ்கார்பிக் அமிலம் 26 மி.கிராம், விட்டமின்ஏ 680 ஐயு.

மருத்துவ பயன்கள் :-

பச்சை பட்டாணியில் நிகோடினிக் அமிலம்(Nicotinic Acid) என்ற வேதிப்பொருள் இருப்பதால் இது ரத்தத்தில் அதிகளவு கொலஸ்ட்ரால் இருந்தால் அதை குறைக்கிறது.

பச்சை பட்டாணியில் லேக்டின்(Lactin) என்ற புரதப்பொருள் இருப்பதால் ரத்த சிவப்பு அணுக்கள் உறைந்து ரத்தக் கட்டுகளாக மாறுவதை தடுக்கிறது. இதனால் மாரடைப்பு, பக்கவாதம் வராமல் தடுக்கலாம்.

பச்சை பட்டாணியில் அதிகளவு விட்டமின் சி இருப்பதால் எல்லா வகையான புற்று நோய்களால் நாம் பாதிக்காதவாறு பாதுகாக்கிறது.

பச்சை பட்டாணியில் கரையாத நார்சத்து இருப்பதால், கொழுப்பு சத்தை குறைத்து இதயநோய், பக்கவாதம் வராமல் தடுக்கிறது.

பச்சை பட்டாணியில் லுட்டின் (Lutin) என்ற கரோட்டீனாய்டு(carotenoid) இருப்பதால் வயதானவர்களுக்கு கண்ணில் ஏற்படு புரை வளர்தலை குறைக்கிறது.

பச்சை பட்டாணியில் அதிகளவு இரும்புசத்து இருப்பதால் நம் உடலில் ரத்த அணுக்கள் உற்பத்தியை அதிகரித்து ரத்த சோகையை போக்கி உடல் சோர்வு, நோய் எதிர்ப்பு சக்தி குறைதல், கவனக்குறைவு ஆகியவற்றை போக்குகிறது.

விட்டமின் கே இருப்பதால் எலும்புகளை பலப்படுத்தி, பாதுகாக்கிறது.

பச்சை பட்டாணியில் விட்டமின் சி இருப்பதால் ரத்த புற்று, நுரையீரல் புற்று, ஆசனவாய் புற்று போன்ற எல்லா புற்று நோய் வராமல் தடுக்கிறது.

பச்சைப்பட்டாணியில் உள்ள விட்டமின் பி6 ரத்த குழாய் சுவர் சுருங்குதலைத் தடுத்து, இதய நோய்களிலிருந்து பாதுகாக்கிறது.

பச்சைபட்டாணியில் விட்டமின் பி6, இரும்பு சத்து இருக்கிறது. இவை இரண்டுமே ஹோமோசிஸ்டைன்(Homocysteine) என்ற ஆபத்தை விளைவிக்கும் வேதிப் பொருள் உடலில் உருவாவதை தடுக்கிறது.

இந்த வேதிப்பொருள் தான் மாதவிடாய் நின்ற பெண்களுக்கும், வயதானவர்களுக்கும் எலும்பு பலம் குன்றல் ஏற்பட காரணமான மூலப்பொருள்.

எனவே மாதவிடாய் நின்ற பெண்கள், வயதானவர்கள் பச்சை பட்டாணியை உட்கொண்டால் எலம்பு பலமடையும். மூட்டு வலி, எலும்பு முறிவு வராமல் தடுக்கலாம்.

கேரட் பட்டாணி சாதம் :-

இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாயை விழுதாக அரைக்கவும். கடாயில் எண்ணெய் சூடாக்கி, கிராம்பு, பிரியாணி இலை, பட்டை வதக்கவும்.

வெங்காயம் சேர்த்துப் பொன்னிறமாகும் வரை வதக்கவும். அதில் அரைத்த விழுது சேர்த்து பச்சை வாடை போக வதக்கவும். கேரட் துருவல், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.

கேரட் நன்கு வேகும் வரை மூடி வைக்கவும். பிறகு அதில் பட்டாணி சேர்க்கவும். தயாராக உள்ள சாதத்தை சேர்த்து மெதுவாகக் கிளறவும். தீ குறைத்து, 5 நிமிடம் கிளறவும். ரெய்த்தாவுடன் பரிமாறினால் சுவையாக இருக்கும்.

பயன்கள் :-

கேரட் கண்களுக்கு குளிர்சியை தரும் உணவாகும், மேலும் இதனை பட்டாணியுடன் சேர்த்து சேர்த்து சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

இரண்டிலும் கால்சியம் சி நிறைந்துள்ளதால் வளரும் குழந்தைக்கு இந்த சாதத்தை கொடுப்பதன் மூலம் உடல் வளர்ச்சி, எலும்பு வளர்ச்சி ஏற்படும்.

பச்சை பட்டாணியை வேகவைத்து உப்பு, மிளகு சேர்த்து வாரம் 2 முறை வளரும் குழந்தைகளுக்கு தர உடல், மனம் பலப்பட்டு ஆரோக்கியமாக காணப்படுவர்.

பச்சை பட்டாணி, கேரட், புதினா, பீன்ஸ் சேர்த்து வேகவைத்து உப்பு சேர்த்து சூப்பாக சிற்றுண்டிக்கு பதில் குழந்தைகளுக்குத் தரலாம்.

உடல் எடை அதிகரிக்க இதனுடன் உருளைகிழங்கு சேர்த்து சமைத்து தரலாம்.

 

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

YouTube இல் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்