100 கிலோ எடை குறைத்தது எப்படி? டயட் ரகசியத்தை கூறும் நபர்

admin

Editorial Team

மனிதர்களுக்கு ஏற்படும் அனைத்து நோய்களுக்கும் முதல் காரணம் என்று பார்த்தால் அது உடல் பருமன் பிரச்சனையே.

இதற்கு அடுத்தபடியாகத்தான் ஹார்மோன் பிரச்சனை, ஊட்டச்சத்து குறைபாடு பிரச்சனை இருக்கிறது.

உடல் எடை கூடிவிட்டால் சிலருக்கு என்னதான் டயட் மேற்கொண்டாலும் அது அவ்வளவு எளிதில் குறைந்துவிடாது.

இதற்கு ஜீன் காரணமாக இருக்கும், சில நேரத்தில் நாம் டயட் இருக்கும்போது உடல் எடை அதிரிக்குமே தவிர, மாறாக குறையாது.

அப்படியென்றால் உடல் எடையை குறைப்பதற்கு ஏற்ற உணவுகளை சரியான முறையில் எடுத்துக்கொள்ளவில்லை என்று அர்த்தம்.

இதோ 100 கிலோவிலிருந்து 80 கிலோவிற்கு எடையை குறைத்த நபர் கூறும் டயட் எனக்கு ஜீரண மண்டல பாதிப்பு ஏற்பட்டதால், போதிய அளவு சத்துக்களை உட்கிரகிக்க முடியாமல், ஹார்மோன் சம நிலையில்லாமல் கொழுப்பு செல்கள் அதிகரித்துள்ளது.

இதனால் உடல் எடை அதிகரித்தேன், நான் டயட் இருந்தபோது கொழுப்பு வகை உணவுகளை நீக்கினாலும் எனது உடல் எடை குறையவில்லை.

ஒவ்வொரு மாதத்திலும் எடை அதிகரித்துக்கொண்டே சென்றது, 2009 ல் ஆரம்பித்த டயட்டில் 2011 ஆம் ஆண்டு 6 கிலோ அதிகமாகி 181 கிலோ இருந்தேன்.

இதனால் கூடுதல் மன அழுத்தத்திற்கு ஆளானேன். இதன் காரணமாக டயட்டை நிறுத்திவிட்டு, என் உடலுக்கு ஆற்றல் தரும் உணவுகளை உட்கொள்ள ஆரம்பித்தேன்.

அதிக ஒமேகா-3 மற்றும் உயர் ரக புரோட்டின் உணவுகளை சாப்பிட்டேன்.

சொக்லேட், சிப்ஸ், பீஸா சாப்பிட வேண்டும் என தோன்றினால் , உடனே சாப்பிட்டேன். ஏனென்றால் அதிக கட்டுப்பாடு இன்னும் சாப்பிட வேண்டும் என்ற எண்ணத்தை தருகிறது என புரிந்து கொண்டேன்.

ஆனால் நாளடைவில் நான் சாப்பிடும் உயர் ரக புரோட்டின் உணவுகளால் மசால் மற்றும் இனிப்புகளின் மேல் ஆசை குறைந்தது.

மேலும், உடல் எடை அதிகரிப்பிற்கு காரணமான ஜீரண மண்டலத்தின் பாதிப்பை குணப்படுத்த இயற்கையான முளைக்கட்டிய பயிறு வகைகள், நல்ல பேக்டீரியாக்களை அதிகரிக்கும் தயிர் யோகார்ட் , ஜீரண என்சைம்களை தூண்டும் உணவுகளை சாப்பிட்டேன்.

இரவில் கார்டிசால் சுரப்பு அதிகமாவதால், சரிவர தூக்கமில்லாத நிலையில், மசால உணவுகளின் மீது விருப்பம் அதிகரிக்கிறது என அறிந்து, தூக்கமின்மையை தடுக்கும் CPAP என்ற மெசினை உபயோகித்து இந்த பாதிப்பை சரிபடுத்தினேன்.

ஃப்ரஷான உணவுகளை சாப்பிட்டேன், இதனால் மன இறுக்கம் குறைந்து உடல் எடையில் மாற்றம் தெரிந்தது. 80 கிலோ வரையில் குறைந்திருந்தேன்.

ஆப்பிள் சைடர் வினிகர், எலுமிச்சை சாறு, பழச் சாறுகள், காய்களின் சாறுகள் என இவற்றை அதிகம் எடுத்துக் கொண்டதால் உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறியது.

இப்போது எனது உடல் எடை 100 கிலோ குறைந்து, 80 கிலோவில் இருக்கிறேன்.

இதனால் மகிழ்ச்சியோடு இருக்கும் நான், இனிமேல் சரியான முறையில் உடல் எடையை பராமரித்து வருகிறேன் கூறியுள்ளார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

YouTube இல் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்