அதென்ன முருங்கைக்காய் சமாச்சாரம்

admin

Editorial Team

இலைகள், வேர், கனி மற்றும் விதை என முருங்கையின் அனைத்து பாகங்களுமே மருத்துவக் குணம் கொண்டவை.

முருங்கை இலையில் அதிகளவு இரும்புச்சத்து நிறைந்துள்ளதால் இரத்த சோகை நீங்கும்.

முருங்கைக் கீரையை சமைத்து உண்டு வந்தால் உடல் வலுப்பெறும், இரத்தம் சுத்தமடையும்.

அடங்கியுள்ள வேதிப்பொருட்கள்

முருங்கையில் வைட்டமின்கள், அமினோ அமிலங்கள் மற்றும் தாது உப்புக்கள் உள்ளன. காய் மற்றும் இலைகள் வைட்டமின் சி மிகுதியாகக் கொண்டவை.

மொரிங்கஜின், மொரிங்ஜின்னைன், பேரேனால், இண்டோல் அசிடிக் அமிலம், டெர்கோஸ், பெர்மைன், கரோட்டின் ஆகியவை காணப்படுகின்றன.

மருத்துவ பயன்கள்

  • மெலிந்த உடல் உள்ளவர்கள் வாரம் இருமுறை முருங்கைக் கீரை உண்டு வந்தால் உடல் தேறும். இலையின் சாறு விக்கல் போக்கும்.
  • பெண்களுக்கு உண்டாகும் உதிர இழப்பைப் போக்க முருங்கைக்கீரை சிறந்த நிவாரணி.
  • தாய்ப்பாலை ஊறவைக்கும், வாரம் இரு முறையாவது பெண்கள் கண்டிப்பாக முருங்கைக் கீரையை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
  • வயிற்றுப்புண்ணை ஆற்றும், அஜீரணக் கோளாறுகளை நீக்கி மலச்சிக்கலைப் போக்கும்.
  • இரத்தத்தில் கலந்துள்ள தேவையற்ற நீர்களை பிரித்து வெளியேற்றும். நீர்ச்சுருக்கு, நீர்க்கடுப்பு போன்ற வற்றைப் போக்கும்.
  • உடல்சூட்டைத் தணிக்கும் இதனால் கண்சூடு குறைந்து, பார்வை நரம்புகள் வலுப் பெறும். பித்தத்தைக் குறைக்கும்.
  • இளநரையைப் போக்கும், சருமத்தைப் பளபளக்கச் செய்யும், முருங்கைக் கீரை சிறியவர் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்றது.

அதென்ன முருங்கைக்காய் சமாச்சாரம்

திருமணமான ஆண்கள் உறவில் ஈடுபடுவதற்காக மனைவி அவர்களுக்கு செய்து கொடுக்கும் உணவுதான் முருங்கைக்காய்.

இதனை எந்த ஆய்வும் கூறவில்லை. மாறாக திரைப்படம் ஒன்றில் இந்த வசனம் சொல்லப்பட்டு, மக்கள் மத்தியில் பிரபலமான ஒன்று.

ஆனால், உணர்வுகளை தூண்டக்கூடிய ஹார்மோன்கள் எதுவும் முருங்கையில் இருக்கிறதா? என்பது அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்படவில்லை.

முருங்கைக்கீரையில் சிட்ரஸ் பழங்களைவிட ஏழுமடங்கு விட்டமின் ‘சி’யும், கேரட்டைவிட நாலு மடங்கு விட்டமின் ‘ஏ’யும் பாலில் இருப்பதைவிட நாலு மடங்கு கால்சியமும் வாழைப்பழத்தில் இருப்பதை விட மூன்று மடங்கு பொட்டாசியமும்தான் நிறைய இருக்கிறது.

மற்றபடி, ஹார்மோன்களை தூண்டக்கூடிய எவ்வித வேதிப்பொருட்களும் அதில் இல்லை.

ஆனால், முருங்கைப் பூவை அரைத்து பாலில் கொதிக்க வைத்து பனங்கற்கண்டு கலந்து 48 நாட்கள் அதாவது ஒரு மண்டலம் அருந்தி வந்தால் தாம்பத்ய உறவில் நாட்டம் உண்டாகும்.

இதை இயற்கையின் வயகரா எனக்கூறலாம். அதுபோல் முருங்கைப் பூவின் பொடியை தேனில் கலந்து ஒரு மண்டலம் சாப்பிட்டு வந்தால் ஆண்மை பெருகும்.

இதனால் தான் இதனை இயற்கையின் வயாகரா என்று கூறுகிறார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

YouTube இல் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்