வீங்கி இருக்கும் வயிற்றை தட்டையாக்குவதற்கு அருமையான டிப்ஸ்!...

admin

Editorial Team

நமது உடலில் வயிறு பானை போன்று இருந்தால், அது மிகுந்த அசௌகரியத்தை எந்நேரமும் ஏற்படுத்தும். உலகில் ஏராளமான மக்கள், குறிப்பாக அமெரிக்கா போன்ற நாடுகளில் வாழும் மக்கள் இந்த பிரச்சனையால் அதிகம் அவஸ்தைப்படுகின்றனர்.

சிலருக்கு இந்த வயிற்று வீக்கம் தற்காலிகமாக ஒருசில உணவுகளை உட்கொண்டதால் ஏற்படும். ஆனால் இந்த வயிற்று வீக்கத்தை அடிக்கடி ஒருவருக்கு ஏற்பட்டால், உடனே உணவுப் பழக்கவழக்கங்களில் மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும்.

இங்கு பானைப் போன்று வீங்கி இருக்கும் வயிற்றை தட்டையாக்குவதற்கு சில டிப்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து தினமும் பின்பற்றி வந்தால், வீங்கி மற்றும் தொங்கி காணப்படும் வயிற்றை வேகமாக தட்டையாக்கலாம்.

உப்பை குறைக்கவும்

உணவின் சுவையை அதிகரிக்க அன்றாடம் உணவில் உப்பைப் பயன்படுத்துவோம். ஆனால் அதிகப்படியான உப்பு , உடலில் நீர்த்தேக்கத்தை ஏற்படுத்தி, உடலில் உப்பு மற்றும் நீரின் அளவில் ஏற்றத்தாழ்வை உண்டாக்கி, அதன் காரணமாக வயிற்றை வீக்கத்துடன் வெளிக்காட்டும்.

எனவே பதப்படுத்தப்பட்ட உணவுகள், ஃபாஸ்ட் புட், உப்புமிக்க ஸ்நாக்ஸ் போன்றவற்றில் சோடியம் அதிகமாக இருப்பதால், அடிக்கடி இம்மாதிரியான உணவுகளை உட்கொண்டு வந்தால், அதை உடனே நிறுத்துங்கள்.

தண்ணீர் குடிக்கவும்

தினமும் குடிக்கும் நீரின் அளவை அதிகரிக்க வேண்டும். தண்ணீரை எவ்வளவுக்கு எவ்வளவு அதிகமாக குடிக்கிறோமோ, அந்த அளவில் செல்களில் தேங்கியுள்ள நீர்மம் வெளியேற்றப்படும்.

இப்படி நீர்மம் வெளியேற்றப்பட்டால், தட்டையான வயிற்றை எளிதில் பெறலாம். எனவே உங்களுக்கு வயிறு வீங்கி இருப்பது போல் உணர்ந்தால், சில டம்ளர் நீரைப் பருகுங்கள்.

சூயிங் கம் மெல்லுவது

நீங்கள் எந்நேரமும் சூயிங் கம் மெல்லும் பழக்கத்தைக் கொண்டிருந்தால், அதிகப்படியான காற்றினை விழுங்கக்கூடும். இதன் காரணமாக வயிறு உப்புசத்துடன், காற்று ஊதிய பலூன் போன்று எப்போதும் வீங்கி இருக்கும். எனவே சூயிங் கம் மெல்லும் பழக்கத்தைக் கைவிடுங்கள்.

கார்போனேட் பானங்கள் குடிப்பது

கார்போனேட் பானங்களை அதிகம் பருகினாலும், வயிறு வீங்கி காணப்படும். எனவே சோடா பானங்களை அதிகம் குடிப்பவராயின், உடனே அவற்றைக் குடிப்பதைத் தவிர்த்திடுங்கள்.

செயற்கை சர்க்கரை

செயற்கை சர்க்கரை சேர்க்கப்பட்ட எந்த ஒரு உணவுப் பொருட்களை உட்கொண்டாலும், அது தீவிரமான இரைப்பை பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

ஆகவே உணவில் இனிப்பு சுவை வேண்டுமானால், சர்க்கரைக்கு பதிலாக தேன் போன்ற இயற்கை சர்க்கரையை சேர்த்துக் கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

YouTube இல் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்