சரும பாதுகாப்பிற்கு சிறந்த மஞ்சளின் மருத்துவ குணங்கள்

admin

Editorial Team

தினமும் கடலை மாவுடன் மஞ்சள் தூள் சேர்த்து, தண்ணீர் விட்டு கலந்து, உடல் முழுவதும் தேய்த்து குளித்து வந்தால், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்கி, சருமம் மென்மையாகவும், அழகாகவும் மாறும்.

* மஞ்சள் தூளை, சந்தனப் பொடியுடன் சேர்த்து பேஸ்ட் போல் கலந்து, முகத்தில் தடவி காய வைத்து கழுவினால், முகத்தில் இருக்கும் முகப்பரு போய்விடும்.

* பாலில் சிறிது மஞ்சள் தூளை கலந்து அதனைக் கொண்டு முகத்தை துடைத்தால், சருமத்தில் உள்ள அழுக்குகள் அனைத்தும் வெளியேறி, சருமம் பொலிவோடு காணப்படும். அதுமட்டுமின்றி இதனை வெடிப்புள்ள உதட்டில் தடவி வந்தால் வெடிப்புகள் நீங்கிவிடும்.

* எலுமிச்சை சாற்றில் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து சருமத்தில் தடவி வந்தால் வெயிலால் மாறியிருந்த சருமத்தின் நிறம் மீண்டும் பழைய நிறத்திற்கு திரும்புவதோடு சருமமும் பொலிவோடு மென்மையாக இருக்கும்.

* பாதங்களில் இருக்கும் வெடிப்புக்களை போக்குவதற்கு தேங்காய் எண்ணெயுடன் மஞ்சள் தூளை சேர்த்து கலந்து வெடிப்புள்ள பகுதியில் தடவி வந்தால் விரைவில் வெடிப்புக்கள் நீங்கி பாதங்கள் மென்மையாக இருக்கும்.

* சருமத்தில் உள்ள காயங்களை போக்கி, அழகான சருமத்தை பெறுவதற்கு, மஞ்சள் தூளுடன் தேன் சேர்த்து கலந்து தடவி ஊற வைத்து கழுவ வேண்டும்.

* தயிருடன் மஞ்சள் தூளை சேர்த்து, முகத்திற்கு தடவி மசாஜ் செய்து வந்தால், சருமம் குளிர்ச்சியுடன் இருப்பதோடு, பொலிவோடும் இருக்கும்.

* மஞ்சள் தூளை நேரடியாக சருமத்தில் தேய்த்து சருமத்தை கழுவினால், அதில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் பொருள் கரும்புள்ளிகளையும், சூரியக்கதிர்களின் தாக்கத்திலிருந்து சருமத்திற்கு சரியான பாதுகாப்பும் கொடுக்கும்.

 

Tags :- மஞ்சள் நிற, மஞ்சள் நிறத்தில், மஞ்சள் துண்டு, மஞ்சள் நிறமுள்ள, மஞ்சள் சாகுபடி, மஞ்சள் கரிசலாங்கண்ணி, மஞ்சள் பூசி, மஞ்சள் கலர், மஞ்சள் நிறமாக, மஞ்சள் நிறமுள்ள 

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

YouTube இல் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்