2 வாரத்தில் 5 கிலோ எடையைக் குறைக்க உதவும் ஓர் அற்புத ஜூஸ் பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமா?

admin

Editorial Team

நாளுக்கு நாள் உடல் எடை அதிகரிக்கிறது என்று வருத்தப்படுகிறீர்களா? உங்கள் தோற்றத்தைக் கண்ணாடியில் பார்த்து தினமும் கவலைக் கொள்கிறீர்களா? உங்கள் நண்பர்கள் உங்களை கிண்டல் செய்கிறார்களா? என்ன முயற்சி செய்தும் உடல் எடை குறையமாட்டீங்குதா? இந்த கட்டுரை உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

ஏனெனில் இங்கு உடல் எடையை வேகமாக குறைக்க உதவும் ஓர் அற்புத பானம் குறித்து கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பானம் உடல் பருமன் பிரச்சனையை மட்டுமின்றி, சர்க்கரை நோயையும் கட்டுப்படுத்தும். சரி, இப்போது அந்த பானம் குறித்து காண்போம் வாருங்கள்.


 

பாகற்காய்

இந்த பானம் தயாரிப்பதற்கு முக்கியமான பொருள் பாகற்காய். பாகற்காயில் உள்ள கசப்புத்தன்மை உடலில் உள்ள கெட்ட கொழுப்புக்களை கரைப்பதோடு, இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தி, உடலை சுத்தம் செய்து, உடல் எடையைக் கட்டுப்படுத்தும்.


மஞ்சள்

மஞ்சளில் உள்ள குர்குமின் நேயெதிர்ப்பு அழற்சித்தன்மை போன்று செயல்பட்டு, உடலில் உள்ள கொழுப்புக்களைக் கரைத்து, உடல் எடை குறைய உதவும்

 

தேன்

தேனில் தனித்தன்மை வாய்ந்த இயற்கை சர்க்கரைகள் உள்ளது. இது உடல் எடையைக் குறைக்க உதவும் உணவுப் பொருட்களில் ஒன்று. ஏனெனில் தேனில் கலோரிகள் ஏதும் இல்லை. மேலும் எடையைக் குறைக்க டயட்டில் இருப்போர், இனிப்புச் சுவைக்கு தேனைப் பயன்படுத்தினால் உடல் எடை குறையும்.

பானம் தயாரிக்க தேவையான பொருட்கள்:

பாகற்காய் - 4-5 துண்டுகள் (தோல் நீக்கப்பட்டது) மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன் தேன் - 1 டேபிள் ஸ்பூன் செய்முறை:

* மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் மிக்ஸியில் போட்டு ஒன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

* பின் அதனை வடிகட்டாமல், அப்படியே வெறும் வயிற்றில் தினமும் அதிகாலையில் எழுந்ததும் குடிக்க வேண்டும்.
 

TAGS :- weight loss, health tips, health, diet, எடை குறைவு, உடல் எடை, ஆரோக்கிய குறிப்புகள், ஆரோக்கியம், டயட்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

YouTube இல் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்