ஞாபக சக்தியை அதிகரிக்கும் உத்தான பாதாசனம்..!

admin

Editorial Team

யோகா செய்தால் மனதை ஒருநிலை படுத்தலாம். அதே போல உடலை ஆரோக்கியமாக வைத்துகொள்ளலாம். ஒவ்வொரு ஆசனத்திற்கும் ஒரு பலன் உண்டு. இதில் உத்தான பாதாசனம் செய்தால் ஞாபக சக்தி அதிகரிக்கும் என்று சொல்லப்படுகிறது.

இந்த உத்தான பாதாசனத்தை எப்படி செய்யலாம் என்று பார்ப்போம்:

மல்லாந்து படுத்துகொண்டு, கை , கால்களை உடலோடு ஒட்டி சேர்த்து வைத்துக்கொள்ளவும். மூச்சை இழுத்த படியே இரு கால்களை மடக்காமல் அப்படியே எவ்வளவு தூக்க முடியுமோ அவ்வளவு தூக்கவும். அதிக நேரம் இவ்வாறு இருப்பது கஷ்டமானது.

இதனால் சிறிது நேரம் கழித்து மெல்ல மெல்லப் பாதங்களைக் கீழே இறக்கவும். பாதங்களை மேலே தூக்குகையில் மூச்சை உள்ளிழுத்துக்கொண்டு பாதங்களைக் கீழே இறக்குகையில் மெல்ல மெல்ல மூச்சை விட வேண்டும். பின்னர் சற்று ஆசுவாசம் செய்து கொண்டு மீண்டும் முயல வேண்டும்.

இந்த ஆசனம் செய்வதால் அடி வயிற்றில் அதிகம் இருக்கும் தசைகள் குறையும். கர்ப்பப்பைக்கு வலுக்கொடுக்கும், சிறுநீர்ப்பை தூண்டப்படும், தொந்தி இருந்தால் குறையும். மேலும் சிறு வயதினருக்கு ஞாபகசக்தி அதிகரிக்கும்.  இதைமாணவர்கள்  செய்வது நல்லது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

YouTube இல் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்