தண்ணீர் குடிக்கும் போது நின்று கொண்டே குடிக்கக் கூடாது – ஏன் தெரியுமா?

admin

Editorial Team

தண்ணீர் குடிக்கும் போது நின்று கொண்டே குடிக்க வேண்டாம் என்று பெரியோர்கள் சொல்வார்கள். அப்படி குடித்தால் அது உடலில் ஒட்டாது என்றும் கூறுவார்கள். அது ஏன் என்று தெரியுமா? ஏனெனில் அப்படி குடிப்பதால் சிறுநீரகம், இரைப்பை குடல் பாதை போன்றவை பாதிக்கப்படுவதோடு, ஆர்த்திரிடிஸ் அபாயம் உள்ளதாம்.

cancer14

இரைப்பை குடல் பாதை பாதிப்பு நின்று கொண்டே தண்ணீரைக் குடிக்கும் போது, நீரானது குடலில் நேராக பாய்வதோடு, குடல் சுவற்றை வேகமாக தாக்குகிறது. இப்படி தாக்குவதால் குடல் சுவர் மற்றும் இரைப்பை குடல் பாதை முழுவதும் பாதிக்கப்படும். இப்படியே நீண்ட நாட்கள் நின்றவாறு நீரைக் குடித்து வந்தால், இரைப்பை குடல் பாதையின் மீள்தன்மை அதிகரித்து, அதனால் செரிமான பாதையில் செயல் பிறழ்ச்சி ஏற்படக்கூடும்.

வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!!!

தண்ணீர் மிகவும் சிறப்பான ஒரு பானமாகும். இத்தகைய தண்ணீரானது தாகத்தை தணிப்பதோடு, உடலில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வைத் தரக்கூடியதும் கூட. மேலும் தினமும் அதிகாலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்து வந்தால் பல்வேறு நோய்களில் இருந்து விடுபடலாம் என்பது தெரியுமா? பொதுவாக உடலில் ஏற்படும் நோய்களானது வயிற்றில் தான் உற்பத்தியாகிறது. எனவே வயிற்றை சுத்தமாக வைத்துக் கொண்டால், நோய்கள் வராமல் தடுக்கலாம். அதற்கு தண்ணீர் தான் பெரிதும் உதவியாக இருக்கும்.

health1

பசியைத் தூண்டும் தண்ணீரை வெறும் வயிற்றில் குடித்து வந்தால், உடலில் உள்ள கழிவுகள் மற்றும் நச்சுக்கள் வெளியேறி, விரைவில் பசி எடுக்க ஆரம்பித்துவிடும்.

இயற்கை தந்த வரப்பிரசாதமான இளநீரில் நிறைந்துள்ள நன்மைகள்!!!

நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே போகிறது. இத்தகைய வெப்பத்தை தணிப்பதற்கு பல்வேறு பானங்களை வாங்கிப் பருகுவோம். ஆனால் இருப்பதிலேயே இளநீர் தான் மிகவும் சிறந்தது. இதில் எந்த ஒரு கலப்படமும் இல்லாததால், இதன் கிடைக்கும் நன்மைகள் பல. அதிலும் இளநீர் உடலில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு மட்டுமின்றி, அழகிற்கு கேடு விளைவிக்கும் பிரச்சனைகளையும் சரிசெய்யும் குணம் வாய்ந்தவை.

1-heart

இளநீரை தினமும் குடித்து வந்தால், அது இரத்த ஓட்டத்தை சீராக வைத்து, இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும்.

கோடையில் அதிகம் விற்கப்படும் தர்பூசணியை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!

கோடைகாலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. அனைவரும் உடலை குளிர்ச்சியுடனும், வறட்சியில்லாமலும் வைத்துக் கொள்ள முயற்சிப்போம். அதற்காக தண்ணீர் அதிகம் குடிப்பதுடன், நிறைய பழங்களையும் வாங்கி சாப்பிடுவோம். அப்படி கோடைகாலத்தில் உடலின் வறட்சியை தடுக்கும் வண்ணம் பல பழங்கள் விலைமலிவில் விற்கப்படும். அதில் ஒன்று தான் தர்பூசணி. தர்பூசணியில் நீர்ச்சத்து அதிகம் இருப்பதுடன், கலோரிகள் குறைவாக இருக்கிறது. இதனால் உடல் வறட்சி நீங்குவது, எடை குறைவது மட்டுமின்றி, வேறு சில நன்மைகளும் தர்பூசணியில் நிறைந்துள்ளன. அதிலும் தர்பூசணி ஒரு இயற்கை வயாகரா என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம், தர்பூசணி ஆண்களுக்கு ஒரு வயாகரா போன்றது. இதுப்போன்று இப்பழத்தில் நிறைய உள்ளன. இங்கு அந்த தர்பூசணி பழத்தின் நன்மைகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அதைப் பார்ப்போமா!

தர்பூசணி

தர்பூசணியில் தமனி மற்றும் இரத்த நாளங்களை பாதுகாக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் உள்ளது. மேலும் இதில் கொழுப்புக்கள் மற்றும் கொலஸ்ட்ரால் குறைவாக இருப்பதால், இது இதயத்திற்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

YouTube இல் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்