நட்சத்திர கிரிக்கட்டில் திரட்டப்பட்ட நிதி இத்தனை கோடியா..!

admin

Editorial Team

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் புதிய கட்டிடம் கட்டுவதற்கு நிதி திரட்ட கடந்த ஞாயிறு அன்று நட்சத்திர கிரிக்கட் போட்டி நடைபெற்றது.

ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்பட நூற்றுக்கணக்கான தென்னிந்திய நட்சத்திரங்கள் கலந்து கொண்ட இந்த போட்டி காலை முதல் இரவு வரை விறுவிறுப்பாக நடைபெற்றது.
இந்நிலையில் இந்த போட்டியின் மூலம் நடிகர் சங்கத்திற்கு ரூ.13 கோடி வசூல் கிடைத்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

நடிகர் சங்க கட்டிடத்தின் மொத்த பட்ஜெட் ரூ.26 கோடி என்ற நிலையில் அதில் பாதி நட்சத்திர கிரிக்கெட் மூலம் கிடைத்துவிட்டதாகவும், மீதி தொகையை விஷால்-மற்றும் கார்த்தி இணைந்து நடிக்கவுள்ள படத்தின் மூலம் திரட்ட முடிவு செய்யப்பட்டிருப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.
நடிகர் சங்கத்திற்கு என சொந்த கட்டிடம் கட்டியே தீருவேன் என்று உறுதிமொழி எடுத்துள்ள விஷால் குழுவினர் கிட்டத்தட்ட பாதிக்கிணறை தாண்டிவிட்டனர்.

எந்த ஒரு செயலின் ஆரம்பம்தான் கொஞ்சம் கடினமாக இருக்கும். பின்னர் போகப்போக அந்த செயல் எளிமையாகிவிடும்.

அதைபோல விஷால் உள்பட நடிகர் சங்க நிர்வாகிகளின் கனவு நனவாகும் நாள் வெகுதூரத்தில் இல்லை என்பதே அனைவரின் கருத்தாக உள்ளது. 

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

YouTube இல் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்