பால் திருடிய நடிகர் விஜய் பக்தர்கள்

admin

Editorial Team

ரைப்பட நடிகர்கள் கட்-அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்வதற்காக ஆவின் பால் திருடப்படுவதாக குற்றம்சாட்டப்படுகிறது. ரஜினி, கமல், அஜித், விஜய் போன்ற மாஸ் ஹீரோக்கள் நடிக்கும் திரைப்படங்கள் வெளியாகும்போது, அவர்கள் ரசிகர்கள் கட்-அவுட்டுகளை வைத்து பாலாபிஷேகம் செய்கிறார்கள்.

இதுபோல சமீபத்தில் 100 லிட்டர் ஆவின் பால் திருப்பட்டதாக கோயம்புத்தூர் பால் முகவர்கள் சங்க வட்டாரங்கள் குற்றம்சாட்டியுள்ளன. முன்பெல்லாம் சிறிய அளவில் இருந்து வந்த பால் திருட்டு இப்போது 100 லிட்டர் என்ற அளவில் வந்து இருக்கிறது என்று பால் முகவர்கள் வருத்தம் தெரிவிக்கிறார்கள். கோவையில், நேரு ஸ்டேடியம், காந்திபுரம் ஆவின் பூத்துகளில் பெருமளவு பால் திருடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

சிறிய அளவு பூத்துகளில் பெரிய பாதுகாப்பு வசதி இல்லை. அதனை அறிந்த சிலர் இது போன்று செய்துள்ளதாக தெரிகிறது. முன்னணி நடிகர்கள் இதில் தலையீட்டு தங்களது ரசிகர்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும் என்று பால் முகவர்கள் கோரிக்கை விடுக்கிறார்கள்.

Tags : Vijay, Vijay Fans, Aavin, Theri

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

YouTube இல் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்