நடிகை பாவனாவை கடத்தச் சொன்னது பிரபல நடிகர்?

admin

Editorial Team

நடிகை பாவனா கடத்தப்பட்டதன் பிண்ணனியில் பிரபல நடிகர் ஒருவர் இருப்பதாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

பிரபல நடிகை பாவனா கடந்த வெள்ளிக்கிழமை இரவு, படப்பிடிப்பை முடித்துவிட்டு கொச்சிக்கு திரும்பிக் கொண்டிருந்த போது 3 பேர் கொண்ட மர்ம கும்பல் அவரை காரில் கடத்தி சென்று 2 மணி நேரத்திற்கும் மேல் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் வீடியோ எடுத்து மிரட்டியுள்ளனர்.

அதன் பின் இந்த வீடியோவை இணையத்தில் பதிவேற்றம் செய்யாமல் இருக்கவேண்டும் என்றால் 30 லட்சம் ரூபாய் தரவேண்டும் என்றும் மிரட்டியுள்ளனர்.

இது தொடர்பாக பாவனா பொலிசாரிடம் புகார் கொடுத்துள்ளார். பொலிசார் நடத்திய தீவிரவிசாரணையில், பாவனாவின் காரை ஓட்டி வந்த மார்டினுக்கு இந்த சம்பவத்தில் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் இந்த சம்பவத்தில் சுனில்குமார் என்ற பல்சர் சுனி, வடிவேல் பிரதீப், மணிகண்டன், பிஜேஷ், சலீம் ஆகியோரும் ஈடுபட்டுள்ளதாக பொலிசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்த கும்பலுக்கு எல்லாம் தலைவன் பாவானாவின் முன்னாள் டிரைவர் சுனில்குமார் தான் என்று கூறப்படுகிறது.

இவர் மீது பல கிரிமினல் வழக்குகள் இருப்பதாகவும், இதை அறிந்த பாவனா அவரை டிரைவர் பணியில் இருந்து நீக்கியதாகவும் கூறப்படுகிறது.

சுனில்குமார் இன்னும் பிடிபடவில்லை. ஆனால், அவரது போன் உரையாடல்களை ஆராய்ந்தபோது, இந்த சம்பவத்துக்குப் பின், கேரளத் திரையுலகின் ஆறு முக்கிய பிரமுகர்களிடம் அவர் பேசியது தெரியவந்துள்ளது.

அதில் ஒருவர், முன்னணி தயாரிப்பாளர். எனவே, இதில் மேலும் பலருக்குத் தொடர்பிருக்கலாம் என்ற கோணத்திலும் பொலிஸார் விசாரித்து வருகின்றனர்.

மேலும் ரியல் எஸ்டேட் தொழில் விவகாரத்தில், ஒரு பிரபல மலையாள நடிகருக்கும், நடிகை பாவனாவிற்கும் இடையே பணம் தொடர்பான பிரச்சனை இருந்து வந்ததாகவும், எனவே, பாவனாவை அசிங்கப்படுத்தவேண்டும் என்பதற்காக அந்த நடிகர் சொல்லித்தான் பல்சர் சுனி, இந்த கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

YouTube இல் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்