தன் சொத்துக்களை பொதுமக்களுக்கு எழுதி வைத்த நடிகர் ரஜினிகாந்த்

admin

Editorial Team

பிரபல திரைப்பட நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சில வருடங்களுக்கு முன்னர் தனக்கு சொந்தமான ராகவேந்திரா திருமண மண்டபத்தில் ஒரு உறுதியை அளித்தார்.

அதாவது தன் பெயரில் அமைந்துள்ள ராகவேந்திரா மண்டபத்தின் நிலத்தை, ராகவேந்திரா டிரஸ்டில் தான் எழுதி வைத்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

தன்னுடைய வாழ்க்கை காலத்துக்கு பின்னர் இந்த டிரஸ்டிலிருந்து வரும் பணம் அனைத்தும் தன்னை வாழ வைத்த தெய்வங்களாகிய பொது மக்களுகே செல்லும் என ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

மேலும், இதிலிருந்து வரும் பணத்தில் கொஞ்சம் கூட தன் குடும்ப உறுப்பினர்களுக்கு போகாது எனவும் அவர் உறுதியளித்துள்ளார்.

இதன்மூலம் தான் சம்பாதித்த சொத்துக்களில் பாதிக்கு மேல் பொதுமக்களுக்கு போகவுள்ளதாக ரஜினி கூறியுள்ளார்

மேலும், இது சம்மந்தமான உயில் பத்திரத்தையும் தன் வழக்கறிஞரிடம் அப்போதே எழுதி கொடுத்துவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

தன்னுடைய இந்த முடிவு தன் மனைவி மற்றும் பிள்ளைகளின் பரிபூரண சம்மதத்துடன் எடுத்த முடிவாகும் எனவும் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ரஜினி பேசிய இந்த வீடியோ, தற்போது வைரலாகியுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

YouTube இல் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்