பேரதிர்ச்சிக்குள்ளாக்கிய ஜெயலலிதாவின் மரணம்- அஜித்தின் உருக்கமான அஞ்சலி

admin

Editorial Team

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு இரங்கல் கூறியுள்ளார்.

ஜெயலலிதாவின் மறைவுக்கு நடிகர் அஜித் விடுத்துள்ள அறிக்கையில், "அம்மா அவர்களின் மறைவால் வாடும் என் சக தமிழ் நாட்டு மக்களுக்கும், அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக தொண்டர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பல்வேறு இன்னல்களை கடந்து சாதனை புரிந்த உயர்ந்த தலைவர் அவர். அவர் மீண்டும் ஆரோக்கியத்துடன் வர வேண்டும் என்று நாம் பிரார்த்தித்துக் கொண்டிருக்கும் வேளையில் அவர் மறைந்து விட்டார் என்ற செய்தி என்னை பேரதிர்ச்சிக்குள்ளாக்கியது.

அவரது ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். அவரது பிரிவால் வாடும் எனக்கும், எண்ணற்ற என் சக தமிழக மக்களுக்கும் இந்த பிரிவை தாங்கும் வல்லமையை தர இறைவனை வேண்டிக் கொள்கிறேன்" என்று தெரிவித்திருக்கிறார் அஜித்.


பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

YouTube இல் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்