தனுஷ் எங்கள் மகன் தான்...மரபணு சோதனைக்கும் நாங்கள் தயார்! பெற்றோர் கதறல்

admin

Editorial Team

பிரபல நடிகர் தனுஷ் எங்களுடைய மகன் தான், நாங்கள் மரபணு சோதனைக்கும் தயாராக இருக்கிறோம் என மேலூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள கதிரேசன்- மீனாம்பாள் தம்பதியினர் தெரிவித்துள்ளனர்.

மதுரை மாவட்டத்தை சேர்ந்த கதிரேசன்- மீனாம்பாள் தம்பதியினர், தனுஷ் தங்களுடைய மகன் என்றும், மாதந்தோறும் ஜீவனாம்சம் வழங்க வேண்டும் எனவும் மேலூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

இந்த வழக்கு விசாரித்த நீதிபதிகள், நடிகர் தனுஷ் ஜனவரி 12ம் திகதி நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளனர்.

இந்நிலையில் கதிரேஷன்- மீனாம்பாள் அளித்துள்ள பேட்டியில், எங்களுடைய மூத்தமகன் கலைச்செல்வன் 11ம் வகுப்பு படிக்கும்போது காணாமல் போனார்.

எங்குதேடியும் கிடைக்காத நிலையில், சினிமாவில் நடித்துக் கொண்டிருப்பது தெரியவந்தது.

சென்னைக்கு சென்றால் கஸ்தூரிராஜா எங்களை விரட்டிவிடுகிறார், எங்களுடன்தான் இருக்க வேண்டும் என நாங்கள் வற்புறுத்தவில்லை.

மாதந்தோறும் எங்களுக்கு ஜீவனாம்சம் வழங்கினால் போதும், தேவைப்பட்டால் மரபணு சோதனை செய்யக்கூட நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று தெரிவித்துள்ளனர்.

இவர்களுடைய வக்கீல் கூறுகையில், தேவையான அளவு ஆதாரங்கள் இருந்ததால் வழக்கில் ஆஜரானதாகவும், கதிரேஷன் உயிருக்கு ஆபத்து இருப்பதால் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

YouTube இல் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்