சொப்பன சுந்தரி பாடல் புகழ் வைக்கோம் விஜயலஷ்மி பிரபல இசையமைப்பாளருடன் திருமணம்!

admin

Editorial Team

தமிழில் எத்தனையோ பாடகர்கள் வந்துபோனாலும் ஒருசிலரது குரலில்தான் தனித்துவம் இருக்கும்.

அந்தவகையில் இன்றைய திகதியில் மிகவும் தனித்துவமான ஒரு பாடகி என்றால் அவர் வைக்கோம் விஜயலக்ஷ்மிதான்.

கண் பார்வையற்ற இவர் தற்போது பல படங்களில் பாடி வருகிறார்.

கேரளாவை சேர்ந்த இவர் தெறி, வேலையில்லா பட்டதாரி உள்ளிட்ட பல படங்களில் பாடியுள்ளார்.

இந்நிலையில் இவருக்கும் கேரளாவைச் சேர்ந்த இசையமைப்பாளர் சந்தோஷ் என்பவருக்கும் அடுத்த ஆண்டு மார்ச் 29-ம் திகதி திருமணம் நடைபெறவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

டி.இமான் இசையமைப்பில் இவர் பாடிய 'சொப்பன சுந்தரி' பாடல்  அண்மையில் வௌியாகிய நிலையில் ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

YouTube இல் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்