விசாலுக்காக சொந்த தங்கைக்கே இப்படி செய்தாரா வரலக்ஷ்மி?

admin

Editorial Team

நடிகை ரதிகாவின் இரண்டாவது கணவர் ரிச்சர்ட் ஹார்டிக்கு பிறந்தவர் ரேயான் ராதிகா.

அவருக்கும்,கிரிக்கெட் வீரர் அபிமன்யூக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு, கடந்த நேற்று முந்தைய தினம் சென்னையின் பிரபல ஹோட்டலொன்றில் இவர்களின் திருமண விருந்து நடைப்பெற்றது.

நடிகர் அருண்விஜய், சூர்யா, ஜோதிகா, மதுபாலா, ஜெயம் ரவி, ரம்யாகிருஷ்ணன், குஷ்பு, தனுஷ், ஐஸ்வர்யா தனுஷ், சுந்தர்.சி என ஏராளமான சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

அடுத்த நாள் மகாபலிபுரத்தில் திருமணம் நடைபெற்றது. அதற்கும் பல சினிமா பிரபலங்கள் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தனர்.

இந்நிலையில், நடிகர் விஷால், கார்த்தி, கருணாஸ், நாசர் ஆகியோர் திருமண விழாவிற்கு செல்லவில்லை. நடிகர் சங்கம் தொடர்பாக, அவர்களுக்குள் மோதல் இருப்பதால் திருமணத்திற்கு செல்லவில்லை என்று தெரிகிறது.

அரசியல் ரீதியாக, தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு மட்டும்தான் சரத்குமார் நேரில் சென்று அழைப்பு விடுத்தார். ஆனால் அவர் வரவில்லை. திமுக தலைவர் கருணாநிதி, விஜயகாந்த் மற்றும் பலருக்கு அழைப்பிதழ் கொடுக்கப்படவில்லை எனத் தெரிகிறது.

இதேவேளை சரத்குமாரின் மகள் வரலஷ்மியும் திருமணத்தில் கலந்துகொள்ளவில்லையென தெரிவிக்கப்படுகின்றது. விஷாலும் அவரும் காதலிப்பதாக நீண்ட நாட்களாக தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில் அவரும் வரவில்லை, இவரும் வரவில்லை என திரையுலகினர் பேச ஆரம்பித்துள்ளனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

YouTube இல் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்