நா. முத்துக்குமார் மரணத்தில் கலந்து கொள்ளாத ரஜனி! ரசிகர்களுடன் கொண்டாட்டம்!

admin

Editorial Team

கேளம்பாக்கம் பண்ணைவீட்டில் தங்கி ஓய்வெடுத்து வரும் ரஜினிகாந்த், திடீரென ஒரு பெண்ணுக்கு அழைப்பு விடுத்தார். அந்த பெண் யார் தெரியுமா…?

கபாலி புகழ் வசனமான, கபாலிடா… பஞ்ச் டயலாக்கை, கொஞ்சம் மாற்றி, “பொண்டாட்டின்னா… பழைய படத்துல வரமாதிரி ‘தழைய தழைய’ பொடவை கட்டிகிட்டு… தல நெறய பூவ வெச்சிகிட்டு… நெத்தி நிறைய குங்குமம் வெச்சிகிட்டு… ‘ஏ பொண்டாட்டி அப்படின்னு கூப்பிட்டா…’ வந்து காலப் புடிச்சு சொல்லுங்க அத்தான்… அந்த மாதிரி பொண்டாட்டின்னு நெனச்சியா… பொண்டாட்டிடா…!!!” என டப்மேஸில் பேசி பேஸ்புக் மற்றும் வாட்ஸ் அப்-ல் ஒரு பெண் பேசியது வைரலாக பரவியது.

இதனை காமெடி செய்யும் வகையில் நெட்டிசன்கள் பலவிதமான மிமிஸ்களை செய்து தெறிக்கவிட்டனர். இந்த பெண்ணுக்கு பெரும்பாலானோர் எதிர்ப்பும், பலர் ஆதரவும் தெரிவித்து கருத்துக்களை தெரிவித்தனர். இந்த பெண்ணை தேடிப்பிடித்து, தற்போது ரஜினிகாந்த் சந்தித்துள்ளார்.

யாருடைய உதவியும் இன்றி மிக அழகாகவும், நேர்த்தியாகவும் அந்த வசனத்தைப் பேசியிருப்பதாக ரஜினிகாந்த் பாராட்டியதாக தெரிகிறது.

பேஸ்புக், வாட்ஸ் அப் ஆகிய சமூக வலைதளங்கள் அதிக பயன்பாட்டுக்கு வந்த பிறகு யார் எப்படி பிரபலமாகிறார்கள் என்பது தெரியவில்லை… இந்த பெண்ணும் அந்த வகையைச் சேர்ந்தவர்தான். ஒரே டப்மேஷ் மூலம் பிரபலமாகி ரஜினியையும் சந்தித்தும் விட்டார்.

 

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

YouTube இல் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்