காதல் கணவனை பிரிகிறாரா டிடி?

admin

Editorial Team

 

ஐந்து வருடம் காதலித்து காத்திருந்து டிடி – ஸ்ரீகாந்த் திருமணம் ஆர்ப்பாட்டமாக முடிந்தது.

பின் சில நாட்களிலேயே புதுப்படம் இயக்கும் முயற்சியில் இறங்கினார் ஸ்ரீகாந்த். கெளதம் மேனன் உதவியாளராக இருந்தவர் என்பதால் டிடியும் அவர் நல்லா வருவார் என்று நம்பினார்.

ஆனால் எதிர்பார்த்த மாதிரி பெரிசா எதுவும் க்ளிக் ஆகலை. சினிமா எடுக்கும் எவருக்கும் வரும் பிரச்சினை ஸ்ரீகாந்த் க்கும் வந்திருக்கிறது.

அந்த சமயத்தில் வேலையில் பிசியாக இருந்த டிடியோ ஒருமன ஆறுதலுக்கு தனது அம்மா வீட்டுக்கு வந்து தங்க ஆரம்பிச்சிருக்கிறாங்க. இது டிடியின் மாமனார் வீட்டில் சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.

தற்போதெல்லாம் ஏதேனும் நிகழ்ச்சிகளில் கூட இருவரும் ஜோடியாக கலந்துகொள்வதில்லை. ஸ்ரீகாந்த் அவரது அம்மா வீட்டிலும் டிடி அவரது அம்மா வீட்டிலும் தனித்தனியாக வசித்து வருகின்றார்கள்.

மற்றவர்களை துருவி துருவி சிரித்து சிரித்து கேள்வி கேட்கும் டிடி, ஸ்ரீகாந்த் க்கும் தனக்கும் இடையேயான இந்த பிரிவு குறித்து எதுவுமே பேசவில்லை.

ஆனால் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றின் போது யாருக்கு தான் பிரச்சினைகள் இல்லை என டிடி சிரிப்பின்றி தெரிவித்திருந்த போதிலும் அவர் கலகலவென்றே டிவியில் தோன்றுகிறார்.

உறவில்லை என்றாலும் சந்தோஷமான தருணங்களில் வாழ்த்தவும், சங்கடங்களில் வருத்தப்படவும் டிடி க்கு ஒரு பெரிய ரசிகர் கூட்டமே காத்திருக்கின்றது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

YouTube இல் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்