இது என்ன மாயம் நாடகமாடிய அமலாபால் – விஜய் ..!

admin

Editorial Team

அமலாபால்-விஜய்கடந்த பத்து நாட்களாக பரபரப்பாக பேசப்பட்டு வந்த அமலாபால்-விஜய் திருமண முறிவு விவகாரம் அடுத்தகட்டத்தை எட்டியுள்ளது. ஆம். இவருவரும் விவாகரத்துக்கு மனுசெய்ய கோர்ட் படிகளில் ஏறிவிட்டார்கள்.. இருவரும் குடும்பநல நீதிமன்றத்தில் அளித்திருந்த மனுவில் ஒரு வாக்கியத்தை படித்ததும் சன்னமான அதிர்ச்சி ஒன்று ஏற்பட்டது. முதலில் அந்த வரிகளை பார்ப்போம்.

“எங்கள் இருவருக்கும் 2014 ஜூன் 10-ந்தேதி திருமணம் நடந்தது. ஓரு ஆண்டிலேயே கருத்துவேறுபாடு ஏற்பட்டு 2015 மார்ச் 3-ந்தேதி முதல் பிரிந்து தனித்தனியாக வாழ்கிறோம்” என குறிப்பிட்டு இருந்தார்கள்.

amala-paul

கிட்டத்தட்ட 16 மாதங்களுக்கு மேலாக இவர்கள் பிரிந்து வாழ்ந்துள்ளதாக அவர்களது அளித்த மனுவின் மூலம் உறுதியாகிறது. ஆனால் கடந்த வருடம் நடந்த இரு நிகழ்வுகள் நிச்சயம் நமக்கு ஆச்சர்யத்தையே தருகின்றன. கடந்த வருடம் ஏப்-6ஆம் தேதி, அதாவது இவர்கள் பிரிந்து வாழ ஆரம்பித்ததாக மனுவில் குறிப்பிட்டிருந்த தேதிக்கு அடுத்த மாதமே, விஜய் இயக்கிய ‘இது என்ன மாயம்’ படத்தின் இசைவெளியீட்டு விழா நடைபெற்றது..

அந்தவிழாவில் அமலாபாலும் உற்சாகமாகவே கலந்துகொண்டார்.. அப்போது மேடையில் பேசிய அமலாபால் விஜய்யை பற்றி பேசும்போது, “விஜய்கிட்ட ஒரு கெட்ட பழக்கம் இருக்கு.. ஹாலிடேக்காக எங்கேயாவது போனால்கூட கதை சொல்லிட்டே இருக்கும்” என்று கூட செல்லமாக பேசினார். ஆனால் இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார் செகிரம் குழந்தைக்கு ரெடி பண்ணுங்க என ஏ.எல்.விஜய்யிடம் கூறி சிரித்தபோது அமலாபாலின் முகம் மாறியதை எத்தனை பேர் கவனித்தார்களோ..?..

அடுத்ததாக கடந்த ஆகஸ்ட் மாதம் நடிகர் பாக்யராஜின் மகன் சாந்தனு பாக்யராஜின் திருமண வரவேற்பு நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியிலும் கூட தங்களது கருத்து வேறுபாடுகளை மறைத்துக்கொண்டு தம்பதி சமேதராக வந்து மணமக்களை வாழ்த்தினார்களே. ஆக தங்களது கருத்து வேறுபாடும் பிரிவும் உடனடியாக யாருக்கும் தெரிவதற்கு, இருவருமே விரும்பாததால் தான் இப்படி ஒரு ஒற்றுமை நாடகம் ஆடியுள்ளனர் போலும். ஆனால் ஏ.எல்.விஜய்யின் தந்தை கொடுத்த பேட்டி காரணமாக இப்போது இவர்கள் பிரிவு வெளியே தெரியவர, வேறுவழியின்றி தற்போது நீதிமன்ற படிக்கட்டுகளை மிதித்துள்ளார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

YouTube இல் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்