நயன்தாராவின் 3-வது காதலும் முறிந்ததா…? யார் தெரியுமா…?

admin

Editorial Team

நயன்தாராவின் மூன்றாவது காதலும் முறிந்து விட்டதாக பட உலகில் பரபரப்பாக பேசப்படுகிறது.

நம்பர்-1 நாயகி

நயன்தாரா கேரளாவில் இருந்து சினிமாவில் அறிமுகமாகி தமிழ், தெலுங்கு பட உலகில் நம்பர்-1 கதாநாயகியாக இருந்து வருகிறார். 10 வருடங்களாக அவரது மார்க்கெட்டை சக நடிகைகளால் சரிக்க முடியவில்லை. ஒரு படத்துக்கு ரூ.3 கோடி வரை சம்பளம் வாங்கி, அதிக சம்பளம் பெறும் தென்னிந்திய நடிகைகள் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறார்.

ரஜினிகாந்த், விஜய், அஜித்குமார், சூர்யா, விக்ரம், விஷால், தனுஷ், சிம்பு என்று முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடி சேர்ந்த பெருமையும் நயன்தாராவுக்கு உண்டு. இப்படி உச்ச நடிகையாக இருக்கும் அவரது சொந்த வாழ்க்கை சோகம் நிறைந்தது.

லைட்பாய் முதல் எல்லா தொழிலாளர்களுடனும் அன்பாக பழகுவார். படப்பிடிப்பு இறுதி நாளில் எல்லோருக்கும் பரிசு பொருட்களை வாரி வழங்குவார், சக நடிகர்களுக்கு நட்சத்திர ஓட்டல்களில் பல லட்சம் செலவு செய்து விருந்து கொடுப்பார் என்றெல்லாம் நயன்தாராவின் நல்ல குணங்களை பட உலகினர் பட்டியலிடுகின்றனர்.

காதல் காயங்கள்

ஆனால் இன்னொரு புறம் காதலில் அவர் தொடர்ந்து காயப்பட்டு வருகிறார். 2006-ல் வல்லவன் படத்தில் நடித்த போது சிம்புவுடன் அவரது முதல் காதல் துளிர்த்தது. இருவரும் திருமணம் செய்து கொள்ளவும் தயாரானார்கள். ஆனால் சில மாதங்களிலேயே அந்த காதல் முறிந்து போனது.

அதன்பிறகு 2009-ல் பிரபுதேவாவுடன் நயன்தாராவின் இரண்டாவது காதல் மலர்ந்தது. வில்லு படத்தை பிரபுதேவா இயக்கியபோது அதில் கதாநாயகியாக நயன்தாரா நடித்தார். அப்போது இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டு ஜோடியாக சுற்றினார்கள். நயன்தாரா மதம் மாறி பிரபுதேவாவை மணந்து சினிமாவுக்கு முழுக்கு போடவும் தயாரானார். ஆனால் கடைசி நேரத்தில் அந்த காதலும் முறிந்து போனது.

3-வது காதல்

மூன்றாவதாக தன்னை காதுகேளாத மாற்றுத்திறனாளி பெண்ணாக ‘நானும் ரவுடிதான்’ படத்தில் நடிக்க வைத்த டைரக்டர் விக்னேஷ் சிவனை காதலித்தார். இருவரும் நெருக்கமாக இருக்கும் படங்கள் வெளியாகி இவர்கள் காதலை உறுதிப்படுத்தின. விக்னேஷ் சிவனுக்கு சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் நயன்தாரா காதல் பரிசாக வீடு வாங்கி கொடுத்து இருப்பதாகவும் கிசுகிசுக்கள் வந்தன.

ஆனால் தற்போது இந்த காதலும் நிலைக்கவில்லை. விக்னேஷ் சிவனுடன் நயன்தாரா சண்டை போட்டு பிரிந்து விட்டார் என்று தகவல் வெளியாகி பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவர்கள் காதல் முறிவுக்கான காரணம் தெரியவில்லை. நயன்தாரா தமிழ், தெலுங்கில் 6 படங்களில் நடித்துக்கொண்டு இருக்கிறார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

YouTube இல் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்