ஆபாச வீடியோவால் தெருவுக்கு வந்த பாலிவுட் நடிகை: கோயில்களில் தஞ்சமடையும் பரிதாபம்

admin

Editorial Team

பாலிவுட் நடிகை அலிசா கான் வறுமையால் டெல்லி கோவில்களில் தஞ்சமடையும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

இவர் ''மை ஹஸ்பன்ட்ஸ் வைஃப்'' என்ற படத்தில் நடித்துள்ளார். காசியாபாத் நகரை நிறுவிய முகம்மது நவாப் காசியாவுதின் கான் பரம்பரையைச் சேர்ந்தவராம் இந்த அலிசா கான்.

மும்பை பட உலகில் ஜொலிக்க வேண்டும் என்று ஆசைப்பட்ட அலிசா, தற்போது வறுமையான சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளார்.

இவர் தனது ஆண் நண்பருடன் சேர்ந்து இருக்கும் ஆபாச வீடியோ ஒன்று ஆபாச இணையதளங்களில் வெளியானது. இதனையடுத்து வீட்டில் இருந்து இவரது குடும்பத்தினர் அலிசாவை வெளியேற்றி விட்டனர்.

இதன் பிறகு அவரது ஆண் நண்பர் பல நாட்கள் இவரை மிரட்டியும் வந்துள்ளார். இது குறித்து அலிசா மும்பை பொலிசில் புகார் அளித்த பின்னர் இணையதளத்தில் இருந்து அந்த வீடியோ நீக்கப்பட்டது.

டெல்லியில் தற்போது வறுமையால் வாடி வரும் அலிசா, கோயில்களிலும், அவரது நண்பர்கள் வீட்டிலும் அவ்வப்போது தங்கி வருகிறார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

YouTube இல் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்