கபாலி கதை வெளியாகியது: கசியவிட்ட படத்தொகுப்பாளர் (காணொளி)

admin

Editorial Team

தமிழ் திரையுலகம் மிக ஆவலாக எதிர்பார்த்துள்ள படம் கபாலி.

ரஞ்சித்தின் இயக்கத்தில் ரஜனி நடித்துள்ள இப்படம் விரைவில் திரைக்கு வருகின்றது.

இந்நிலையில் படத்தின் தொகுப்பாளரான பிரவீன் கே.எல் படம் தொடர்பில் முக்கிய தகவல்கள் சிலவற்றை நேர்காணலொன்றில் வெளியிட்டுள்ளார்.

சாதாரண மனிதன் ஒருவன் எவ்வாறு தாதாவாகின்றான். 25 வருடங்கள் தனது வாழ்வை இழந்து, சிறையில் இருந்து திரும்பும் அவன் எவ்வாறு , வில்லன்களை எதிர்க்கின்றார் என்பதே கதை என தெரிவித்துள்ளார்.

மிகவும் உணர்வுப்பூர்வமான படமெனவும் , ஒரு மனிதனின் வாழ்க்கை பற்றியதெனவும் தெரிவித்துள்ளார்.

ரஜினி தனியாக வில்லன்களை எதிர்ப்பார் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் படத்தில் ஹீரோவைப் போல வில்லனும் சக்தி மிக்கவர்களாக இருப்பதாகவும் , இது ரஜினியின் நடிப்புத் திறனை நன்கு வெளிப்படுத்தும் படமென அவர் தெரிவித்தார்.

‘Rajini is Back’ என்று சொல்லும் அளவுக்கு படம் அமைந்துள்ளதாக அவர் தெரிவித்தார். முள்ளும் மலரும் ரஜனியைப் போல பழைய ரஜினியைக் காணமுடியுமென அவர் தெரிவித்தார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

YouTube இல் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்