திருமணத்திற்காக உலகின் பிரபலமான இரட்டை சகோதரிகள் எடுத்த முடிவு

admin

Editorial Team

உலக அளவில் பிரபலமான இரட்டை சகோதரிகள், தங்களுடைய 6 வருட காதலனை திருமணம் செய்ய எடுத்துள்ள முடிவுக்கு அவுஸ்திரேலிய அரசு தடை விதித்துள்ளது.

அவுஸ்திரேலியாவை சேர்ந்த அன்னா மற்றும் லூசி டிசினெக் என்கிற 33 வயது இரட்டை சகோதரிகள் உலவ அளவில் மிகவும் பிரபலமானவர்கள்.

இவர்கள் இருவரும் தங்களை யாரும் அடையாளம் காணக்கூடாது என்பதற்காக, 20 வயது ஆரம்பிக்கும் போது உடலில் இருந்த சிறிய மாற்றங்களையும் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சையின் மூலம் சரி செய்தனர்.

அறுவை சிகிச்சைக்காக மட்டும் £138,917 பவுண்டுகளை செலவு செய்துள்ளனர். இதன் மூலம் லிப் ஃபீல்டர்ஸ், மார்பக மாற்று சிகிச்சை, முகத்தசை, லேசர் சிகிச்சைகள், புருவங்கள் மற்றும் முடித்திருத்தம் செய்தனர்.

இவர்கள் இரண்டு பேரும் சேர்ந்து 2012ம் ஆண்டு முதல் பென் பைரன் என்ற நபரை காதலித்து வந்தனர்.

சமீபத்தில் இருவரும் சேர்ந்து தங்களுடைய காதலனை திருமணம் செய்ய விரும்புவதாக அறிவித்திருந்தனர்.

ஆனால் அவுஸ்திரேலியாவின் திருமண சட்டப்பிரிவு 1961-ன் படி இந்த திருமணத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனால் மனமுடைந்து போன சகோதரிகள் தனியார் தொலைக்காட்சியின் மூலம், அனுமதி வழங்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

YouTube இல் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்