வேறொரு நபருடன் திருமணம்! மனைவியை கொன்றுவிட்டு நாடகமாடிய கணவன்

admin

Editorial Team

ஹரியானாவை சேர்ந்த நபர் ஒருவர், தனது முன்னாள் மனைவியை கொன்று விட்டு நாடகமாடியது அம்பலமாகியுள்ளது.

ஹரியானாவை சேர்ந்த மருத்துவர் தர்மேந்திர பிரதாப், இவரது மனைவி ராக்கி ஸ்ரீவஸ்தவா, வேறொரு பெண்ணுடன் ஏற்பட்ட தொடர்பின் காரணமாக 2ம் திருமணம் செய்து கொண்டார்.

இதனால் குடும்பத்தில் பிரச்சனை எழ ராக்கியை பிரிந்தார் தர்மேந்திர பிரதாப், தனியாக இருந்த ராக்கி மனிஷ் என்பவரை கரம்பிடித்தார்.

இந்நிலையில் சில மாதங்களுக்கு முன் இருவரும் நேபாளம் சென்ற நிலையில், மனிஷ் மட்டும் நகரத்திற்கு திரும்ப ராக்கி அங்கேயே இருந்துள்ளார்.

வெகு நாட்கள் ஆகியும் ராக்கி திரும்பி வராததால் சந்தேகம் அடைந்த அவரது குடும்பத்தினர் பொலிசில் புகார் அளித்தனர்.

மனிஷ் தான் குற்றவாளியாக இருக்கலாம் என பொலிசார் நினைத்த நிலையில், தர்மேந்திர பிரதாப்பை கைது செய்துள்ளனர்.

விசாரணையின் போது ராக்கியின் செல்போனை ஆய்வு செய்ததில், அவரது எண்ணுக்கு தர்மேந்திர பிரதாப் தொடர்பு கொண்டது தெரியவந்தது.

மேலும் இருநாட்கள் நேபாளத்தில் அவர் இருந்ததும் தெரியவந்ததால், அவரை கைது செய்து விசாரித்ததில் ஒப்புக்கொண்டார்.

அதாவது நண்பர்களுடன் சேர்ந்து குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து, குன்றில் இருந்து ராக்கியை தள்ளி கொலை செய்துள்ளார்.

மேலும் அவரது பேஸ்புக்கை தொடர்ந்து பயன்படுத்தி உயிருடன் இருப்பதாக நம்பவைத்துள்ளதும் தெரியவந்துள்ளது.

சொத்து பிரச்சனை காரணமாகவே தர்மேந்திர பிரதாப் இச்செயலை செய்ததாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

YouTube இல் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்