மனைவியால் கொலைசெய்யப்பட்ட பிள்ளைகள்... அபிராமியின் கணவர் விஜய்யின் தற்போதைய நிலை!...

admin

Editorial Team

சென்னை குன்றத்தூரை சேர்ந்த அபிராமி, பிரியாணிக்கடை சுந்தரத்தின் மீது கொண்ட கள்ளக்காதலால் 4 வயது மகள் கார்னிகா மற்றும் 7 வயது மகன் அஜய் ஆகிய இருவரையும் கொலை செய்தார்.

பின்னர் கள்ளக்காதலனுடன் கேரளாவுக்கு ஓடிப்போக முயற்சிக்கும்போது நாகர்கோவிலில் அபிராமி கைது செய்யப்பட்டு தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தமிழகத்தில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்நிலையில் அபிராமி ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம் அவரது ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்தது.

இது குறித்து அபிராமியின் கணவர் விஜய் கூறுகையில், அபிராமிக்கு ஜாமீன் கிடைக்கவில்லை என்பதை டிவி, பேப்பரில் பார்த்துதான் தெரிந்து கொண்டேன்.

நான் தனியாகவே வசித்து வருகிறேன். இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. என்னை யாரும் அழைக்கவில்லை. நானும் போகவில்லை. என் குழந்தைகளின் நினைவோடு அவர்களை மறக்க முடியாமல் வாழ்ந்து வருகிறேன் என்று தீராக் கண்ணீரோடு வாழ்ந்து வருவதாக தெரிவித்துள்ளார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

YouTube இல் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்