கணவன் மீது அதிக காதல் வைத்த மனைவி: குழந்தையை கொன்றுவிட்டு தற்கொலை! சிக்கிய குறிப்பு

admin

Editorial Team

புனேவில் கணவரின் மீது அதிக காதல் வைத்திருந்த மனைவி, மாமியாரின் கொடுமை காரணமாக தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புனே மாநிலம் ஹதாஸ்பார் பகுதியை சேர்ந்தவர் ஜான்வி (22). இவருடைய கணவர் அமித் அப்பகுதியில் உள்ள பொலிஸ் நிலையத்தில் பணிபுரிந்து வருகிறார்.

தம்பதியினருக்கு 2 வயதில் சிவன் என்ற மகன் இருந்தான். 4 வருடங்களுக்கு முன்பு இருவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது.

திருமணம் முடிந்ததிலிருந்தே அமித்தின் தாய் சுஜாதா, மருமகள் ஜான்வியை கொடுமைப்படுத்தி வந்ததாக தெரிகிறது.

இதனால் மனமுடைந்த காணப்பட்ட ஜான்வி, தன்னுடைய மகனை கொலை செய்துவிட்டு, தானும் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொண்ட பொலிஸார் சுஜாதாவின் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும், வீட்டில் ஆய்வு நடத்திய போது தன்னுடைய கணவருக்கு ஜான்வி எழுதியிருந்த ஒரு குறிப்பு சிக்கியது.

அதில், "அமித் நீ என்னை அதிகம் காதலிக்கிறாய் என்பது தெரியும். ஆனால் எனக்கான போதிய நேரம் ஒதுக்கவில்லை" என குறிப்பிட்டிருந்தார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

YouTube இல் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்