கணவனுக்கு துரோகம் செய்த மனைவி: கள்ளக்காதலால் நடந்த விபரீதம்

admin

Editorial Team

தமிழகத்தில் தொழிலாளியை கொலை செய்த மனைவி, கள்ளக்காதலனை பொலிசார் கைது செய்துள்ளனர்.

ஆற்காடு அருகே தாஜ்புரா ஏரிக்கரையோரம் அடையாளம் தெரியாத ஆண் பிணம் கிடப்பதாக கடந்த ஆகஸ்டு மாதம் பொலிசாருக்கு தகவல் கிடைத்தது. இது குறித்து பொலிசார் விசாரித்து வந்தனர்.

இந்நிலையில் ஆற்காடு பூபதி நகரை சேர்ந்த ரவி (45) என்ற தொழிலாளியை காணவில்லை என அவரது மனைவி மாரி (38) ஏற்கனவே பொலிஸ் புகார் கொடுத்திருந்தார்.

அதன்பேரில் பொலிசார் தாஜ்புரா ஏரிக்கரையில் கிடந்த பிணத்தை மாரியை அழைத்து சென்று காண்பித்தனர்.

அப்போது பிணமாக கிடப்பவர் எனது கணவர் இல்லை என்றார் மாரி. பின்னர் சடலமானது பிரேத பரிசோதனை செய்து அடக்கம் செய்யப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து பொலிசார் தீவிரமாக விசாரித்து வந்தனர்.

விசாரணையில், ரவியின் மனைவி மாரி உறவினர் வீட்டிற்கு சென்று வரும்போது அதே பகுதியை சேர்ந்த முருகன் (48) என்பவருடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதனை அறிந்த ரவி மனைவியை கண்டித்துள்ளார். இதனால் மாரியும் முருகனும் ரவியை தீர்த்து கட்ட முடிவு செய்தனர். அதன்படி கடந்த ஆகஸ்டு மாதம் 24-ந் திகதி குடிபோதையில் இருந்த ரவியை மாரியும், முருகனும் சேர்ந்து விறகுகட்டையால் அடித்து கொலை செய்து தாஜ்புரா ஏரிக்கரையில் வீசிவிட்டு சென்றது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து மாரி, முருகன் ஆகிய இருவரையும் பொலிசார் கைது செய்துள்ளனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

YouTube இல் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்