மகளை உயிரோடு எரித்து கொன்ற இளம்தாய்: அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவத்தின் பின்னணி

admin

Editorial Team

தமிழகத்தில் 6 வயது மகளை எரித்து கொன்று விட்டு தானும் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட தாயின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டத்தின் சுப்பநாயக்கனூரை சேர்ந்தவர் ஜெயராஜ் (35). லொறி ஓட்டுனர். இவருக்கு திருமணமாகி சங்கமேஸ்வரி (30) என்ற மனைவியும், ரமிதா (6) என்ற மகளும் இருந்தனர்.

நேற்று முன்தினம் சங்கமேஸ்வரி தனது சொந்த ஊருக்கு சென்று தனது தாயாரை பார்த்து வருவதாக ஜெயராஜிடம் கேட்டதாகவும், அதற்கு அவர் மறுத்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

பின்னர் அவர் லொறியில் பெங்களூருவுக்கு சென்று உள்ளார்.

இந்நிலையில் நேற்று காலை வீட்டில் தனியாக இருந்த சங்கமேஸ்வரி, தனது 6 வயது மகள் மீது மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்துவிட்டு, அவரும் தீ வைத்துக்கொண்டதாக கூறப்படுகிறது.

இதில் படுகாயம் அடைந்த சங்கமேஸ்வரியும், குழந்தை ரமிதாவும் தீயில் கருகி பரிதாபமாக இறந்தனர்.

ஜெயராஜின் வீட்டில் இருந்து புகை வெளிவருவதை கண்ட அப்பகுதியினர், வீட்டின் கதவை தட்டி உள்ளனர். கதவு திறக்கப்படாததால் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்து உள்ளனர். அப்போது சங்கமேஸ்வரியும், அவரது குழந்தை ரமிதாவும் தீயில் கருகி இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

சம்பவம் குறித்து பொலிசாருக்கு தகவல் தரப்பட்ட நிலையில் அங்கு வந்த பொலிசார் இருவரின் உடல்களையும் மீட்டனர்.

முதல்கட்ட விசாரணையில், தாய் சுந்தராம்பாளை பார்க்கச்செல்ல முடியாத காரணத்தால் சங்கமேஸ்வரி கவலையில் இருந்தது தெரியவந்தது.

இதன் காரணமாக சங்கமேஸ்வரி, குழந்தையை எரித்துக்கொன்று, தற்கொலை கொண்டாரா? அல்லது வேறு காரணமா? என பல்வேறு கோணங்களில் பொலிசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

YouTube இல் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்