சனிப்பெயர்ச்சி பலன்கள்- மேஷம் ராசிக்காரர்களின் கவனத்திற்கு

admin

Editorial Team

1193ம் ஆண்டு ஹேமலம்ப- ஹேவிளம்பி வருடம் மார்கழி 1ம் தேதி சனிக்கிழமை பிற்பகல் 2.38க்கு (16- 12- 2017) அன்று சனீபகவான் விருச்சிகம் ராசியில் இருந்து தனுஷ் ராசிக்கு பிரவேசிக்கிறார்.

தனுஷ் ராசியில் சுமார் 2 1/2 ஆண்டுகள் தங்க உள்ளார், இந்நிலையை கொண்டு மேஷம் ராசி முதல் மீனம் ராசி வரை 12 ராசிகளுக்கும் நடக்கக்கூடிய பலாப்பலன்களை ஆன்மீக ஜோதிடர் S.P.ராஜன் D.A., கணித்துள்ளார்.

மேஷம்

அசுவினி- பரணி- கார்த்திகை 1ம் பாதத்தில் பிறந்தவர்கள். பெயர் எழுத்துக்கள்- சூ, சே, சோ, ல, லி, லு, லே, லோ, அ

மலர் போன்ற மணக்கும் திறன் கொண்டவர்கள், அன்பும்- பண்பும் ஒருங்கேப்பெற்றவர்கள்.

நீதியின் வழி தான் வாழ்க்கை என்ற தத்துவத்தில் வாழ்க்கையை வாழ்பவர்கள்.

இப்போது பொன்மயமான காலம், சனி 9ல் உள்ளார். படிப்படிப்பாய் துன்பம் விலகும்.

எங்கு இருந்தாலும் கசப்பை இவ்வளவு காலமும் தந்துக் கொண்டு இருந்த வியாழனும் கூட நற்கதியை தரவல்ல இடத்தில் உள்ளதால் சனீ பெயர்ச்சின் ஆரம்ப காலம் கட்டமே- இனிப்பை நல்கும்.

பயம்- அச்சம்- பீதி அகன்று இன்பம்- இனிமை- பொறுமை கூடும், மனம் ஒரு விதமான மகிழ்ச்சியில் இருக்கும்.

செய்யும் காரியத்தில் வெற்றியின் சுவடி தோன்றும், இவ்வளவு காலமும் நர்த்தகம் ஆடிபகவான் இப்போது சாந்தமாக உறையாடுவார்.

நிலையில் ஏற்றம், தொழில் சிறப்பு, வருமானத்தில் திருப்தி என்ற எதிலும் ஒரு வெற்றி பாதை தோன்றும்.

நோய் தொல்லைகள் விலகி, சுறுசுறுப்பாக இயங்குவீர்கள், வேலைகளை விரைந்து முடிப்பீர்கள்.

செய்தொழிலில் நினைத்தபடி செயல் திட்டங்கள் நிறைவேறும், முன்னேற்றம் வரும்.

தொழில் விருத்தியடையும், பெண் தொழிலாளர்களுக்கு நன்மை ஏறு்படும். கூட்டு தொழிலிலும் நன்மை உண்டாகும்.

மறைமுக எதிர்ப்புகள் ஒன்றும் செய்யாது, ஏற்கனவே உள்ள வழக்குகளில் வெற்றி பெறலாம்.

தெய்வ கருணை சனீபகவான் மூலம் ஒளிர்விடுவதை காணலாம், கோவிலுக்கு செய்வதும், ஆலய திருப்பணி செய்வதும் தற்போது உங்களுக்கு சிறப்பானதாக இருக்கும்.

முருகன் உங்களின் அருள் தெய்வம், அவரை வணங்குங்கள், வாழ்வு சிறக்கும்.

அசுவினி- சிவன், பரணி- பெருமாள், கார்த்திகை- முருகன், பொதுவில் ஸ்ரீ சுப்பிரமணியர் இதுதான் உங்கள் ராசியின் கடவுள் ஆகும்.

இவர்கள் எப்போதும் வெற்றிக்கு அழைத்து செல்வார்கள், வேலையில் பணி சிறக்கும், பதவி உயர்வு காணலாம்.

அயல்நாட்டில் வேலை கிடைக்க வாய்ப்புகள் உண்டு, வசந்தம் உங்கள் வீடு தேடி வரும்.

மொத்தத்தில் மேஷம் ராசிக்காரர்களுக்கு இனிய நல்ல காலத்தின் நற்செயல்கள் உண்டாகும், இதில் முதல் ஒரு வருடம் சிறப்பானது பின் ஒரு வருடம் கொஞ்சம் சிறப்பானது. பின் 6 மாதம் மிக மிக சிறப்பானது.

அதிர்ஷ்ட எண்கள்- 1, 3, 9

அதிர்ஷ்ட கல்- பவளம்

அதிர்ஷ்ட நிறம்- சிகப்பு

வணங்கவேண்டிய தெய்வம்- ஸ்ரீசுப்பிரமணியர்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

YouTube இல் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்