வெளியானது ஆர்.கே.நகர் அதிமுக-திமுக வேட்பாளரின் பெயர்: யார் தெரியுமா?

admin

Editorial Team

ஆர்.கே.நகர் அதிமுக-திமுக வேட்பாளரின் பெயர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் தெகுதியான ஆர்.கே.நகர் தொகுதியில் இடைத்தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இன்று அதிமுக வேட்பாளரை தெரிவு செய்து அறிவிக்கும் அக்கட்சியின் ஆட்சி மன்றக் குழு கூட்டம் நடைபெற்றது. இதில், அதிமுகவின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆர்.கே.நகர் தொகுதியில் வேட்பாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

அதேசமயம், ஆர்.கே.நகர் திமுக வேட்பாளரை அக்கட்சியின் பொதுச் செயலாளர் அன்பழகன் அறிவித்துள்ளார். ஆர்.கே.நகர் திமுக வேட்பாளராக ஆர்.கே.நகர் பகுதிச் செயலாளர் என்.மருதுகணேஷ் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

 

இதுகுறித்த டிடிவி தினகரன் கூறியதாவது, .ஆர்.கே. நகர் சட்டமன்ற இடைத்தேர்தலில் அஇஅதிமுக வேட்பாளராக ஆட்சி மன்றக் குழு என்னை தேர்வு செய்தமைக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

 

புரட்சித்தலைவி அம்மாவின் ஆசியோடும், தியாக தலைவி சின்னம்மாவின் வழிகாட்டுதலோடும் நல்லாட்சி தொடர உங்கள் அனைவரது ஆதரவையும் வேண்டிக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

YouTube இல் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்