சனிப்பெயர்ச்சி பலன்கள்- ரிஷபம் ராசிக்காரர்களின் கவனத்திற்கு

admin

Editorial Team

1193ம் ஆண்டு ஹேமலம்ப- ஹேவிளம்பி வருடம் மார்கழி 1ம் தேதி சனிக்கிழமை பிற்பகல் 2.38க்கு (16- 12- 2017) அன்று சனீபகவான் விருச்சிகம் ராசியில் இருந்து தனுஷ் ராசிக்கு பிரவேசிக்கிறார்.

தனுஷ் ராசியில் சுமார் 2 1/2 ஆண்டுகள் தங்க உள்ளார், இந்நிலையை கொண்டு மேஷம் ராசி முதல் மீனம் ராசி வரை 12 ராசிகளுக்கும் நடக்கக்கூடிய பலாப்பலன்களை ஆன்மீக ஜோதிடர் S.P.ராஜன் D.A., கணித்துள்ளார்.

ரிஷபம்

கார்த்திகை 2, 3,4ம் பாதங்கள், ரோகிணி, மிருகசிரிஷம் 1,2ம் பாதங்கள். பெயர் எழுத்துகள்- இ, உ, ஏ, ஒ, வ, வி, வு, வே, வோ

நல்ல மனதுக்காரர்கள், பண்பு நெறி உள்ளவர்கள், உயிர் உள்ள வரையும் உப்பிட்டவரை மறக்காதவர்கள்.

கூர்மையான அறிவு உள்ளவர்கள், நினைப்பதை நடத்தி வெற்றி காண்பீர்கள், சகல காரியங்களிலும் நிலைத்து நிற்க முயற்சி செய்பவர்கள்.

நினைக்கிறீர்கள்- ஆனால் காலம் தற்போது கொஞ்சம் தடையாக உள்ளது. வெகு காலமாக கஷ்டப்படுகிறீர்கள். உங்கள் மரியாதை, சந்தியில் உள்ளது.

கூப்பிட்டாலும் வர மறுக்கிறது, எதிர்ப்பார்கள் கை ஓங்கி உங்கள் கன்னத்தை பதம் பார்க்கிறது, ஆனாலும் முடிவில் ஒன்றுமில்லை. என்ன செய்வது அதுதான் 8 மிட சனி, 6லும் கூட வியாழன்.

இன்னும் ஒரு வருடம் அதாவது 24-08- 2018 வரை மிக சிக்கலான காலம், தள்ளிவிட வேண்டும்.

ஆயுளுக்கு பங்கம் இல்லை, சரீர உபாதை 40 வயதை கடந்தவர்களை ஒரு கை பார்க்கும். உணவு வகைகளை பத்திரமாக பார்த்துக் கொண்டால் சரீரரம் சுகமாக இருக்கும்.

60 வயதை தாண்டியவர்கள்- அடிக்கடி வைத்தீய வசதியை நாட வேண்டியது வரலாம். மனம் சரியில்லை, ஆகவே எதுவும் சரியாக வராது.

பயம் இல்லாமல் வாழ கற்றுக் கொள்ள வேண்டும். நீங்கள் தான் எதிலும் அவசரம் காட்டுவீர்கள். ஆகக்கூடியது ஒன்றுமில்லை.

தடை இல்லாமல் சக்தியை பெற ஸ்ரீபெருமாளை காணுங்கள். லட்சுமி விரதம் நன்று. ஆயினும் பகுத்தறிவில் புகுந்துவிட்டால் கடவுளையும் தூற்றத் தொடங்குவீர்கள்.

கொஞ்சம் சுறுசுறுப்பை வரவழைத்துக் கொள்ளவும். இன்னும் முயற்சியில் இறங்குங்கள் வெற்றி உண்டாகும்.

நண்பர்களால் பலன் இல்லை, மறைமுக எதிர்ப்பு கைதூக்கும். சகிப்பு தன்மை இருந்தால் வெற்றி கொள்ளலாம்.

குடும்பம் மனதிற்கு தொல்லை தரலாம், விட்டுக் கொடுத்து போங்கள்.

வழக்கு ஏற்படலாம் என்பதால் கவனம் தேவை, ஏற்கனவே உள்ள வழக்கில் சரியான தீர்வு வராது.

இளம் வயதுக்காரர்கள் காதல் வயப்பட்டு கதற வேண்டிய காலம் வரலாம். சனீ பொல்லாதவர். திராசு முனையில் தீர்ப்பை வழங்கக்கூடியவர்.

எதிலும் பட்டும் படாமல் வாழ்வது தான் நல்லது. ஸ்ரீ சனீபகவானே போற்றி- போற்றி அவ்வளவு தான் தினமும் காலையில் 19 முறை கூறிப்பாருங்கள்.

தொழிலாளர்கள், தொழில் முயற்சியில் வெற்றியை காண்படு கஷ்டம், கடன் தொல்லை இருக்கும்.

ஒரு வருடத்திற்கு பின்னர் உங்களுக்கு உற்சாகம் கூடும். எதிர்ப்புகள் மறையும்.

பொறுமை காத்தி வெற்றியை ஈட்டவும். பெண்களுக்கு திருமண முயற்சிகள் தள்ளிப் போகலாம்.

பொதுவாக சனீபெயர்ச்சி ஆன முதல் வருடம் நன்மை இல்லை. அடுத்த ஒரு வருடம் சுபம், மீதி வரும் 6 மாதம் கஷ்டம் என்று பலன்கள் மாறி வரும் நிலையில் வெற்றிபெற வாழ்த்துகிறேன்.

அதிர்ஷ்ட எண்கள்- 5,6,8

அதிர்ஷ்ட கல்- வைரம்

அதிர்ஷ்ட நிறம்- வெள்ளை, ஆகாய நீலம்.

வணங்க வேண்டிய தெய்வம்- ஸ்ரீ வெங்கிடாஜலபதி

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

YouTube இல் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்