சசிகலாவுக்கு மேலும் ஒரு ஆண்டு சிறை? சிறைத்துறை அதிரடி அறிக்கை: பரபரப்பு தகவல்

admin

Editorial Team

சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா உள்ளிட்ட மூன்று பேர் தங்களுடைய அபராதத்தொகை செலுத்தாததால், அவர்களுக்கு மேலும் ஒரு ஆண்டு சிறைதண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் சசிகலா உள்ளிட்ட மூவருக்கும் நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 10 கோடி அபராதத்தொகை செலுத்தவேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் அவர்கள் இதுவரை தங்களுடைய அபராதத்தொகையை கட்டவில்லை என்று கூறப்படுகிறது.

இதைத் தொடர்ந்து பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறை நேற்று ஒரு அதிரடி அறிக்கை வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதில் சசிகலா உள்ளிட்ட மூன்று பேரும் 10 கோடி அபராதம் செலுத்த வேண்டும், மேலும் அவர்கள் நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும்.

இதில் தனது அபராதத்தொகை கட்டத்தவறினால், சிறை தண்டனை மேலும் ஒரு ஆண்டு நீட்டிக்கப்படும் என்று அந்த அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

YouTube இல் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்