50 பேருக்கு 1 லட்சத்து 40 ஆயிரம் கோடி கடன் தள்ளுபடி..! ஏழைகளின் வயிற்றில் மண்ணைப் போடுது மத்தியஅரசு..!

admin

Editorial Team

பணக்காரா்களுக்கான அரசாக மாறிவட்டது மத்திய அரசு, ஏழைகளின் வாழ்வாதாரங்களை பாதிக்கும் திட்டம் தமிழகத்துக்கு.
குழி தோண்டி புதைக்கும் திட்டம் அனைத்தும் தமிழகத்துக்கு கொடுக்குது. வறட்சி நிவாரணம் கொடுக்கவில்லை, வர்தா புயல் நிவராணம் கொடுக்கவில்லை. அதற்கு முன்னர் ஏற்பட்ட புயல் பாதிப்புக்கும் நிவாரணம் வழங்கவில்லை.


உச்சநீதி மன்றம் தீர்ப்பில் கூறியபடி தமிழகத்தில் தண்ணீரை திறந்து விட சொல்லியும் மறுத்த, கா்நாடக அரசை கண்டிக்கவில்லை.
தமிழகத்துக்கு மோடி அரசு தொடா் துரோகம் செய்து வருகிறது. இந்த நிலையில் வங்கி கணக்கில் குறைந்த பட்ச தொகையாக ரூ 5000 வைத்திருக்க வேண்டும் என்று கூறியுள்ளது. இது ஏழைகளின் வயிற்றில் மண்ணைப்போடுவதுக்கு சமம்.


இந்த திட்டம் எதற்கு ஏன், நாங்க என்ன பாவம் செய்தோம் என்று ஏழைகள் புலம்பிக் கொண்டு இருக்க.. அந்த உண்மையை நேற்று ராகுல் காந்தி பொதுக் கூட்டத்தில் பேசி உடைத்துள்ளார்.


அதவாது உத்தரப்பிரதேச மாநிலத்தில் இறுதிகட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ள சோன்பத்ராவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ராகுல்காந்தி பேசினார்.
அப்போது, நாட்டில் மிகப்பெரும் பணக்காரர்கள் ஐம்பது பேரின், ஒரு லட்சத்து நாற்பதாயிரம் கோடி ரூபாய் கடனை மோடி அரசு தள்ளுபடி செய்துள்ளதாகவும், அதேநேரத்தில் ஏழை விவசாயிகளின் ஐம்பதாயிரம் கோடி ரூபாய் விவசாயக் கடனைத் தள்ளுபடி செய்ய மறுப்பதாகவும் குற்றஞ்சாட்டினார்.
மேலும், வேலையில்லாத் திண்டாட்டத்தை ஒழிப்பதாக நாடாளுமன்றத் தேர்தலின் போது  அளித்த வாக்குறுதியையும் நரேந்திர மோடி நிறைவேற்றவில்லை என ராகுல்காந்தி குற்றஞ்சாட்டினார்.


மோடியின் அரசில் ஏழை மக்களின் வாழ்க்கை படும் திண்டாட்டமாக உள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

YouTube இல் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்