கோக், பெப்சி புறக்கணிப்பால் அதிர்ச்சியில் உறைந்த அமெரிக்கா.. உலகமே போற்றும் தமிழன் பெருமை..!!

admin

Editorial Team

கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழகத்தில் நடந்த ஜல்லிக்கட்டு புரட்சி பல்வேறு தாக்கத்தையும், மாற்றத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.
இது தமிழகம், இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் தாக்கியது.
இந்த புரட்சியில் மாணவர்கள், இளைஞர்கள் ஒன்றிணைந்து தன்னெழுச்சியாக அறவழியில் போராடி, அதில் வெற்றியும் கண்டார்கள்.
வரலாற்றில் இடம் பிடித்த ஜல்லிக்கட்டு புரட்சியின்போது இளைஞர்கள் கோக், பெப்சி போன்ற வெளிநாட்டு குளிர்பானங்களை தடை செய்ய வேண்டும் என்றும் கோஷம் எழுப்பினர்.


இளைஞர்கள் அன்று எழுப்பிய கோஷம், உலகத்தையே உலுக்கியது.
பன்னாட்டு நிறுவனமான கோக், பெப்சி குளிர்பானங்களை தடை செய்ய முடியாமல் உலக நாடுகள் பல தவித்து வருகின்றன.
ஆனால், தமிழன் ஒரே போராட்டத்தால் அந்நிய நிறுவனங்களுக்கு அபாய மணி அடித்து எச்சரித்துள்ளான் என்றால் மிகையாகாது.
இந்த போராட்டம், உலக அரங்கில் தமிழனுக்கு ஒரு மகுடத்தை சூட்டியது.


மேலே உள்ள படத்தில் வெளிநாட்டு டிவி சேனலில் அமெரிக்க அதிபர் டிரம்ப் பேசி கொண்டிருக்கிறார்.
அந்த படத்திற்கு கீழே Breaking News : tamilnadu traders ban pepsi coca cola என்ற வரிகள் ஓடி கொண்டிருக்கின்றன.
அதாவது, “தமிழ்நாடு வர்த்தகர்கள் பெப்சி, கோக்கை தடை செய்திருக்கிறார்கள்” என்று செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

YouTube இல் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்