ஆபாச படத்திற்கு அடிமையான கணவன்: மனைவி என்ன செய்தார் தெரியுமா

admin

Editorial Team

பார்ன் பழக்கத்திற்கு அடிமையான கணவனால் இல்வாழ்க்கை பாதிக்கிறது என்று மும்பையை சேர்ந்த பெண் ஒருவர் நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்துள்ளார்.

மும்பையை சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவன் பார்ன்-க்கு அடிமையாகி இருப்பதாகவும். அதனால் தங்கள் இல்லற வாழ்க்கையில் எதிர்மறை தாக்கங்கள் ஏற்பட்டு கடுமையாக பாதிப்படைந்துள்ளது எனவும் வழக்கு தொடர்ந்தார்.

எனவே அதை தடுக்க, ஆபாச இணையத்தளங்களை உடனடியாக முடக்க வேண்டும் அதற்கு நீதிமன்றம் தடை விதிக்க வேண்டும் என்று அந்த பெண் சுப்ரீம்கோர்ட் படியேறி தனது கருத்தை முன் வைத்துள்ளார்.

இதுகுறித்து அந்த பெண் கூறியதாவது, தனது கணவர் நன்கு படித்தவராக இருந்தாலும் இந்த பார்ன் விஷயத்தில் அதிக நேரம் செலவிடுகிறார். இதனால் எங்கள் இல்வாழ்க்கை பெரிதாக பாதிப்படைந்துள்ளது.

இது வருங்கால இளைஞர்கள் வாழ்க்கையில் மிகப்பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அவர் கூறியுள்ளார்.

மேலும் இந்த பெண் கொடுத்த மனுவை பார்த்த சமூக ஆர்வலர், ஒருவர் இவருடைய முப்பது வருட இல்வாழ்க்கையில் பார்ன் மிக பெரிய தொந்தரவாக உள்ளது.

அதிலும் இரண்டு குழந்தைகளுக்கு தந்தையான ஒருவர் இப்படி அடிமையாகி இருப்பது அதிக கவலை அளிக்கிறது என்றும் கூறியுள்ளார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

YouTube இல் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்