ஆதியை புறக்கணித்த மக்கள்! தமிழகம் முழுவதும் போராட்டம் தொடர்கிறது!

admin

Editorial Team

ஜல்லிகட்டு நிரந்தர சட்டம் நிறைவேறுவதற்கு முன்பாகவே போராட்டம் திசைமாறி செல்வதாக கூறி, போராட்டத்தில் இருந்து விலகுவதாக இசையமைப்பாளர் ஆதி தெரிவித்துள்ளார்.

 

தனது முகநூல் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள இந்த வீடியோவை,  முன்னணி செய்தி சேனல்கள் தொடர்ந்து அரை மணி நேரத்திற்கும் மேலாக திரும்ப திரும்ப ஒளிபரப்பி வருகின்றன.

அவரது பேஸ் புக் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள வீடியோவை 5:50 மணி நிலவரப்படி 4லட்சத்து 56 ஆயிரம் பேர் வரை பார்த்துள்ளனர்.  32 ஆயிரம் பேர் மட்டுமே ஷேர் செய்துள்ளனர்.

அப்படி இருந்தும் தமிழகத்தில் எங்கும் போராட்டத்தின் வீரியம் இதுவரை குறையவில்லை. கோரிக்கை முழுமையாக நிறைவேறும் முன்பே ஆதி போராட்டத்தை கலைக்கப் பார்ப்பதாக சமூக வலைதளங்களில் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

அவரது ஆதரவாளர்கள் சிலர் அவருக்கு ஆதரவான கருத்துக்களையும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். இந்த போராட்டத்தில் “நடிகர்கள் அனைவரையும் புறக்கணித்திருந்தால் இந்த நிலை வந்திருக்குமா?” என ஒருவர் கமெண்ட் செய்துள்ளார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

YouTube இல் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்