தமிழகத்தையே உலுக்கிய இளவரசன் மரண வழக்கில் தீர்ப்பு

admin

Editorial Team

கடந்த 2013 ஆம் ஆண்டு காதல் பிரச்சனையால் இறந்துபோன இளவரசன் வழக்கில் இன்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தர்மபுரியை சேர்ந்த இளவரசன் என்பவர் கல்லூரியில் படித்தபோது திவ்யா என்ற மாணவியி காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

இருவரும், வெவ்வேறு வகுப்புகளை சேர்ந்தவர்கள் என்பதால் திவ்யாவின் குடும்பத்தார் இந்த திருமணத்திற்கு ஒத்துக்கொள்ளவில்லை. மேலும் திவ்யாவின் தந்தை அவமானம் தாங்கமுடியாமல் தற்கொலை செய்துகொண்டால் மனமுடைந்த திவ்யா, தனது காதல் கணவனை பிரிந்து தாயுடன் செல்வதாக நீதிமன்றத்தில் கூறியதால், அவர் தாயுடன் அனுப்பி வைக்கப்பட்டார்.

இதற்கிடையில், திவ்யாவின் பிரிவினை தாங்கிகொள்ள முடியாத இளவரசன் 2013 ஆம் ஆண்டு யூலை 14 ஆம் திகதி ரயில் தண்டவாளத்தில் இறந்தநிலையில் கண்டெடுக்கப்பட்டார்.

இளவரசனின் மரணம் கொலை? தற்கொலை? என இருவேறு கருத்துகள் நிலவிவந்த நிலையில், தனது மகன் கொலை செய்யப்பட்டுள்ளான் என்றும் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க வேண்டும் எனவும் இளவரசனின் தந்தை இளங்கோ சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார்.

மேலும், இந்த வழக்கினை சிபிஐ விசாரித்து வந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இளவரசன் மரணம் தற்கொலைதான் என சிபிஐ அறிக்கை வழங்கியது. அந்த அறிக்கையை ஏற்றுக்கொண்ட சென்னை உயர்நீதிமன்றம், இளவரசனின் மரணம் தற்கொலை தான் என தீர்ப்பு வழங்கி, இந்த வழக்கினை முடித்துள்ளது.

 

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

YouTube இல் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்