7 முஸ்லீம் நாடுகளுக்கு தடை: அம்பலமான டிரம்பின் ரகசியம்

admin

Editorial Team

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிரடிகளுக்கு பெயர் பெற்றவர். தற்போது 7 முஸ்லீம் நாடுகளை மட்டும் தடை பட்டியலில் சேர்த்த அவர், பல முஸ்லீம் நாடுகளை சேர்க்காமல் விட்டுள்ளார்.

டிரம்ப்பின் குடும்பத்தினர் பல முஸ்லீம் நாடுகளில் ரியல் எஸ்டேட் உள்ளிட்ட தொழில்கள் செய்து வருவதால் அந்த நாடுகள் எல்லாம் இந்த பட்டியலில் சேர்க்கப்படவில்லையாம்.

ஈரான், ஈராக், சிரியா, சோமாலியா, சூடான், லிபியா, ஏமன் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு அமெரிக்காவுக்கு வர விசா கிடையாது. இந்த நாடுகளிலிருந்து அகதிகளும் வரக் கூடாது என்று உத்தரவிட்டுள்ள டிரம்ப்பின் செயலுக்கு அமெரிக்காவிலேயே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இந்த நாடுகளில் டிரம்ப் எந்தத் தொழில் நிறுவனத்தையும் நடத்தவில்லை. இதனால்தான் கண்ணை மூடிக் கொண்டு இந்த நாடுகளை கறுப்புப் பட்டியலில் சேர்த்துள்ளார். அதேசமயம், பல முக்கியமான முஸ்லீம் நாடுகளை டிரம்ப் அரசு கண்டு கொள்ளாமல் விட்டுள்ளது என்று கூறப்படுகிறது.

இந்த உண்மையை அம்பலப்படுத்தியுள்ளார் வாஷிங்டனில் செயல்பட்டு வரும் குடிமக்களுக்கான பொறுப்புரிமை என்ற தன்னார்வ அமைப்பைச் சேர்ந்த ஜோர்டான் லிபோவிட்ஸ்.

இதைக் குறிப்பிட்டு நார்ம் ஈசன் என்பவர் (இவர் முன்னாள் அதிபர் ஒபாமாவின் நெறிமுறைகளுக்கான ஆலோசகராக இருந்தவர்) டிரம்ப்புக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார்.

அதில், எச்சரிக்கை: அதிபரே உங்களது முஸ்லீம்களுக்கான தடையில் சில நாடுகளை விட்டுள்ளீர்கள். அங்கெல்லாம் உங்களது தொழில் நிறுவனங்கள் இருக்கின்றன என்பதால் விதி விலக்கு அளித்துள்ளீர்கள். இது அரசியல் சட்டத்தை மீறும் செயலாகும். கோர்ட்டில் சந்திப்போம் என்று கூறியிருந்தார்.

ஆனால் வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஸ்டெபானி கிரிஷாம் இதை மறுத்துள்ளார். அதிக ஆபத்து உடைய பகுதிகள் என்பதால்தான் இவை தடை செய்யப்பட்டுள்ளன. வேறு காரணம் இல்லை என்று கூறியுள்ளார் ஸ்டெபானி.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

YouTube இல் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்