மூன்று பள்ளி மாணவர்களுடன் உறவு கொண்ட இளம் ஆசிரியை! நேர்ந்த விபரீதம்

admin

Editorial Team

அமெரிக்காவில் பள்ளி மாணவர்களுடன் தவறான உறவு வைத்து கொண்ட ஆசிரியைக்கு 30 வருடம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதை தொடர்ந்து, தன் தவறுக்காக அவர் வருந்தியுள்ளார்.

அமெரிக்காவின் Kaysville கவுண்டியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியையாக இருப்பவர் Brianne Altice (37), இவருக்கும் அங்குள்ள வகுப்பில் படிக்கும் மூன்று மாணவர்களுக்கும் தகாத உறவு ஏற்பட்டுள்ளது.

 

இதையடுத்து அந்த மாணவர்களுடன் இவர் பல முறை உல்லாசம் அனுபவித்துள்ளார்.

பின்னர் இந்த விடயம் வெளியில் தெரிய வர இவர் மீது சிறுவர்களை தவறான வழிக்கு அழைத்து செல்லுதல் போன்ற சட்டத்தின் அடிப்படையில் பொலிசார் வழக்கு பதிவு செய்தனர்.

நீதிமன்றத்தில் Brianneக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனையளித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

தற்போது சிறையில் இருக்கும் Brianne கூறுகையில், நான் செய்த தவறுக்கு நானே முழு பொறுப்பு. யார் மீதும் பழி போட நான் விரும்பவில்லை என கூறியுள்ளார்.

மேலும் தான் திருந்தி வாழ ஆசைப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

2020ஆம் ஆண்டு வரை Brianne நிச்சயம் சிறையில் இருக்க வேண்டும் எனவும் அதுவரை பரோல் கிடைக்காது எனவும் கூறப்பட்டுவந்த நிலையில், பரோல் கமிட்டி அடுத்த மாதம் கூடுவதால் Brianne அதற்கு முன்னரே வெளியில் வருவாரா என அப்போது தெரியவரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

YouTube இல் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்