சசி முதல்வராக, மத்திய அரசு அனுமதித்த மா்மம்: இதுக்கும் காரணம் பன்னீரா..!

admin

Editorial Team

சசிகலா முதல்வராக வருவதை மத்திய அரசு விரும்பவில்லை. இதனால்தான் ஜெயலலிதா இறந்தவுடன், சசி விரும்பியபடி எடபாடி பழனிச்சாமிக்கு பதிலாக மத்திய அரசு விரும்பிய பன்னீர் செல்வம் முதல்வராக கொண்டு வரப்பட்டார்.

முதல்வராக பன்னீர் செல்வம் வந்தாலும், அவருக்கு அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், கட்சியின் மாநில நிர்வாகிகளிடம் செல்வாக்கு இல்லாமல் இருந்தது.

மத்திய அரசு தான் விரும்பிய நபரையே, தலைமை செயலாளராகவும் கொண்டு வந்தது.

சசிகலாவை மிரட்டுவதற்காக அவர்களின் பினாமியான மணல் ரெட்டியை கைது செய்து சிறையில் அடைத்தது.

வலது கரமாக செயல்பட்ட முன்னாள் தலைமை செயலாளா் ராமமோகன ராவ் வீட்டிலும் அதிரடியாக சோதனை செய்தது.

அது போயர்ஸ் கார்டனுக்கும் சென்று ஜெயலலிதாவின் இரண்டு அறைகளுக்கு சீலும் வைத்தது.

சசிகலா அதிமுக பொதுச் செயலாளராக கொண்டு வரப்பட்டார்.  பிரதமருக்கு கடிதம் எழுதினார் சசி. அந்த கடிதத்துக்கு மரியாதை இல்லாமல் போனது.

டெல்லிக்கு தம்பிதுரை தலைமையில் சென்ற எம்பிக்கள் குழுவைக்கூட பிரதமர் சந்திக்கவில்லை. முதல்வர் பன்னீரை மட்டுமே ஜல்லிக்கட் பிரச்சனையில் சந்தித்தார்.

கிருஷ்ணா நதிநீர் பிரதமரின் முயற்சியால் ஒபிஎஸ்க்கு அதிலும் வெற்றிக் கிடைக்க வைத்தார். ஜல்லிக்கட்டு பிரச்சனையிலும் பன்னீருக்கு வெற்றி கிடைக்க வைத்தார்.

மத்திய அரசு  பன்னீர் செல்வத்தை  தூக்கிபிடித்தது. ஆனால் பன்னீர் செல்வம் தனித்து செயல்படுவதை விரும்பவில்லை. அது தனக்கு துரோகி என்கிற நீங்காத அவச்சொல்லை ஏற்படுத்தும் என்று நம்பினார்.

இதன் காரணமாக பதவி ஆசையை ஓரம் கட்டிவிட்டு சாதாரண மனிதனாகவே நடந்து வந்தார்.

சசிகலா குடும்பத்தினர் நெருக்கடி பணியவில்லை பன்னீர், சசிகலாவே நேரில் அழைத்து பேசினார்.

அப்போது உங்கள் விருப்பமே என் விருப்பம், என்ன செய்ய வேண்டும் கூறுங்கள் என்றாராம்.

எனக்கு பிரச்சனை தரும் மத்திய அரசை ஆப் செய்யவேண்டும், நான் முதல்வராக வேண்டும் என்றாராம் சசிகலா.

பிரதமா் மோடியிடம் ஓபிஎஸ் பேசினார். நீங்கள் என்னை மதித்தால், என் மீது அன்பு கொண்டு உள்ளது உண்மை என்றால் எனக்காக சசி கூறியதை செய்யுங்கள். நாங்கள் சோ்ந்து நன்றியுடன் இருப்போம் என்று பேசி பிரதமா் மோடியை மசியவைத்ததாக கூறப்படுகிறது.

இதனையடுத்து கிரின் சிக்னல் சசிக்கு கிடைத்தது. நாளை அவசரமாக கவர்னர் சென்னைக்கு வருகிறார். சசிகலா முதல்வராக விழாக்கள் ஏற்பாடு துவங்கியது.

இதுவும் பன்னீரின் நல்ல எண்ணத்திற்கும், தன்னை வளா்த்து விட்டசசிக்கு நன்றியோடு அருகில் நிற்பதையும் காட்டுகிறது.

முதல்வராக சசி பதவி ஏற்பதற்கு காரணம் பன்னீா் செல்வத்தால்தான் என்று டெல்லி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

YouTube இல் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்